
மூத்த இயக்குநர்-நடிகர் இயக்குனர் இமயம் பாரதிராஜா, வேலையின்றி அன்றாட தேவைகளுக்கு சிரமப்படும் சினிமா தொழிலாளர்களுக்கு 50 அரிசி மூட்டைகளைக் கொடுத்து உதவியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது “வணக்கம், கொரோனா வைரஸின் அசாதாரண தாக்குதல் உலகையே முடக்கி, பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதை கருத்தில் கொண்டு, படப்பிடிப்பு வேலைகள் இன்றி தவித்து வரும் பெப்சி உறுப்பினர்களுக்கு ஒரு சிறு உதவியாக 50 அரிசி மூட்டைகளை (25kg) வழங்குகிறேன். மேலும், நோயின் தீவிரம் கருதி அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும் அன்போடு வேண்டுகிறேன்” என கூறியுள்ளார்.
முன்னதாக அவர், நன்றியுணர்வின் ஒரு சிறிய அடையாளமாக, காவல்துறையினர், நிறுவன ஊழியர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு முகமூடிகள், கையுறைகள் மற்றும் கை சுத்திகரிப்பான்களை வழங்கி உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.