V4UMEDIA
HomeNewsKollywoodகொரோனா வைரஸிற்கு எதிராக போராடுபவர்களுக்காக எஸ்.பி.பி, யேசுதாஸ் பங்கேற்கும் ஆன்லைன் இசை நிகழ்ச்சி!!

கொரோனா வைரஸிற்கு எதிராக போராடுபவர்களுக்காக எஸ்.பி.பி, யேசுதாஸ் பங்கேற்கும் ஆன்லைன் இசை நிகழ்ச்சி!!

 கரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்களுக்காக இந்தியாவின் முன்னணி பாடகர்கள் வீட்டிலிருந்தே பங்குபெறும் ‘சங்கீத சேது’ என்னும் ஆன்லைன் இசைக் கச்சேரி நிகழ்ச்சியை நடத்தவுள்ளதாக இந்திய பாடகர்கள் உரிமை கூட்டமைப்பு (இஸ்ரா) அறிவித்துள்ளது.

இந்நிகைழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், லதா மங்கேஷ்கர், கே.ஜே. யேசுதாஸ், ஹரிஹரன், ஆஷா போஸ்லே, ஷங்கர் மஹாதேவன், உதித் நாராயணன், பங்கஜ் உதாஸ், அல்கா யாக்னிக், சோனு நிகம், கைலாஷ் கேர், ஷான் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி பாடகர்கள் வீட்டில் இருந்தபடியே பாடல்களை பாடவுள்ளனர்.

‘சங்கீத சேது’ நிகழ்ச்சி ஏப்ரல் 9,10,11 ஆகிய மூன்று தினங்களும் இரவு 8 மணிக்கு நடைபெறும்.

Most Popular

Recent Comments