
தமிழ் சினிமாவில் நடிகராக மற்றும் தயாரிப்பாளராக இருக்கும் ஆர்.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அடுத்த படம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். “அமீரா, என்ற இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். இந்த கதை எனக்கு மிகவும் பிடித்துப்போனது, இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த அண்ணன் சீமானுக்கு எனது நன்றி”. விரைவில் இதற்கான அறிவிப்பு வரும். என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படத்தில் அனுஷிதாரா என்ற மலையாள நடிகை நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
#ameera movie based on a true story . Really impressed with the script. Thanku so much director sir and @SeemanOfficial anna for the opportunity .special thanks to @i_anusithara 🙏🙏🙏coming soon pic.twitter.com/273inR2p2y— RK SURESH (@studio9_suresh) April 9, 2020