படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளர்கள், தினசரி நடிகர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். தொழிலாளர்களுக்கு பெப்சி அமைப்பு சார்பில் நிதியுதவிகள் வாங்கப்பட்டு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.
நாடக நடிகர்கள் மற்றும் தினசரி நடிகர்களுக்கும் உதவும் பொருட்டு நிதியுதவி கோரினார்கள். பலரும் நிதியுதவி அளிக்க முன்வராத காரணத்தால் 15 லட்ச ரூபாய் மட்டுமே வசூலாகியுள்ளது. இதனிடையே நாடக நடிகர்கள் மற்றும் தினசரி நடிகர்களுக்கு 1,250 கிலோ அரிசி வழங்கியுள்ளார் யோகி பாபு. இதனை அவர் மக்களை நேரில் சந்தித்து வழங்கினார்.