சூப்பர்ஸ்டார் நடித்து பி.வாசு இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளிவந்த படம் சந்திரமுகி. அப்படம் அதுவரை ரஜினி படங்கள் செய்த அனைத்து வசூல் சாதனையையும் முறியடித்து உலகமெங்கும் மாபெரும் ஹிட்டானது. இப்படத்தை சிவாஜி ப்ரோடுக்ஷன்ஸ் சார்பில் நடிகர் பிரபு பெரும் பொருட்செலவில் தயாரித்தார்.
இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களின் ஆசியுடன் சந்திரமுகி-2 படத்தில் லாரன்ஸ் நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க பி.வாசு அவர்கள் இயக்கவுள்ளார். மேலும் இப்படத்திற்காக வாங்கிய 3 கோடி அட்வான்ஸ் தொகையை கொரோனா நிவாரண நிதியாக அளித்துள்ளார்.
pic.twitter.com/fGggWKEpHP— Raghava Lawrence (@offl_Lawrence) April 9, 2020