V4UMEDIA
HomeNewsKollywoodபடத்திற்காக திரைக்கதை எழுதும் நடிகை சோனியா அகர்வால்!!

படத்திற்காக திரைக்கதை எழுதும் நடிகை சோனியா அகர்வால்!!

ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் சோனியா அகர்வால் தன்னுடைய தினசரி வாழ்க்கையில் அவர் ஈடுபடும் செயல்கள் குறித்து மனம் திறந்துள்ளார், “தினமும் காலை என் குடும்பத்தினருடன் யோகா செய்கிறேன். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. இப்போது நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இதுதான் ஒரே வழி. சினிமாவுக்காக திரைக்கதை தயார் செய்து வருகிறேன். அதை செய்ய போதுமான நேரம் இருக்கிறது. 

பறவைகள், விலங்குகளுக்கு உணவு கொடுக்கிறேன். குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க இதுவே அற்புதமான தருணம். வீட்டுக்குள் இருங்கள். அரசாங்கத்தின் அனைத்து உத்தரவுகளையும் பின்பற்றுங்கள் என்று இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Most Popular

Recent Comments