
கரோனா வைரஸ் அச்சத்தால் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு.இதனால் சின்னதிரை, வெள்ளித்திரை என எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை.
இதையொட்டி, விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்ப வேண்டும் என்ற வேண்டுகோள் எழுந்தது. இதை பலரும் விஜய் தொலைக்காட்சியின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டுத் தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி மீண்டும் ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி தினமும் காலை 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவித்துள்ளது. இதனால் அந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் பெரும் உற்சாகமாகியுள்ளனர்.


























