
உலகெங்கிலும், கொரோனா வைரஸ் அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளது மற்றும் திரைப்பட நட்சத்திரங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு, திரைப்பட வெளியீடுகள் ஒத்திவைக்கப்படுவதால், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் இது ஒரு சோதனை நேரம்.
நோ டயம் டு டை, முலான், ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9, வொண்டர் வுமன் 1984 போன்ற திரைப்படங்களுடன் பிப்ரவரி மாதத்திலிருந்தே ஹாலிவுட் திரைப்பட ஒத்திவைப்புகளை அறிவிக்கத் தொடங்கியது மற்றும் இன்னும் பல திரைப்படங்கள் அவற்றின் தேதிகளைத் தள்ளி வைத்தனர், அந்த பட்டியலில் டாம் குரூஸின் டாப் கன் மேவரிக் படமும் சேர்ந்துள்ளது.
டாப் கன் மேவரிக் 1986 இல் வெளியான டாப் கன்னின் தொடர்ச்சியாகும், மேலும் இப்படத்தின் வெளியீடு டிசம்பருக்கு ஒத்திவைக்கப்படுவதை ஹீரோ டாம் ட்விட்டரில் தெரிவித்தார், “உங்களில் பலர் 34 ஆண்டுகள் காத்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். துரதிர்ஷ்டவசமாக, இது இன்னும் சிறிது காலம் இருக்கும். டாப் கன்: மேவரிக் இந்த டிசம்பரில் ரிலீஸ் ஆகும். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
I know many of you have waited 34 years. Unfortunately, it will be a little longer. Top Gun: Maverick will fly this December. Stay safe, everyone.— Tom Cruise (@TomCruise) April 2, 2020