
நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் சுந்தர் சி மீண்டும் இணைந்து படம் பண்ண போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முறை ஆக்ஷன் களமாக இல்லாமல், சுந்தர்.சியின் வழக்கமான காமெடி பின்னணியில் பண்ணலாம் என்று முடிவு செய்துள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தை முடிவுற்றாலும், இன்னும் ஒப்பந்தமாகக் கையெழுத்தாகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ‘சக்ரா’ மற்றும் ‘துப்பறிவாளன் 2’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். அதனைத் தொடர்ந்து சுந்தர்.சி படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்குவார் எனத் தெரிகிறது.