
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் நடைபெற்றது. அப்போது, முன்னதாக வெளியான 3 பாடல்களுடன் மொத்தம் எட்டு பாடல்கள் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் போது பேசிய இசையமைப்பாளர் அனிருத் “இன்னும் இரண்டு பாடல்கள்” இருப்பதாகவும், விரைவில் அவற்றையும் வெளியிடப்படுவதாக கூறினார். மேலும், கொரோனா தொற்று காரனமாக ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘பொளக்கட்டும் பற பற’ பாடலின் பாடலாசிரியர் திரு. விஷ்ணுவை தனது ட்விட்டர் பக்கத்தில் புகழ்ந்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். விஷ்ணு ஏற்கனவே கைதி படத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாஸ்டர் படத்தில் “போனா போகட்டும்” என்ற பாடலையும் அவர் எழுதியுள்ளார்.
Vera level lyricist sir neenga
https://t.co/Y5WAhgIffG— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 2, 2020