நம் நாடு மக்களுக்காக கொரோனா வைரஸை பொருட்படுத்தாமல் அயராது உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி சொல்லும் விதமாக ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் ஒரு அறிக்கையை பதிவிட்டுள்ளார்.
“இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும், அவர்களின் துணிச்சலுக்கும் தன்னலமற்ற தன்மைக்கும் நன்றி தெரிவிப்பதற்கே இந்த பதிவு. இந்த மிக மோசமான தொற்றுநோயை சமாளிக்க அவர்கள் எவ்வளவு தயாராக இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது மனநிறைவை தருகிறது.
நம்மைக் காப்பாற்ற அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளனர். நமது வேறுபாடுகளை மறந்து உலகை தலைகீழாக மாற்றிய இந்த கண்ணுக்கு தெரியாத எதிரிக்கு எதிராக ஒன்றுபடுவதற்கான நேரம் இது. மனிதநேயம் மற்றும் ஆன்மீகத்தின் அழகை செயலில் கொண்டுவருவதற்கான நேரம் இது. அருகில் இருப்பவர்கள், மூத்த குடிமக்கள், புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு மற்றும் ஏழைகளுக்கு உதவுங்கள், என்று அவர் கூறியுள்ளார்.