கொரோனா வைரஸிடமிருந்து மக்களை காப்பாற்ற மருத்துவர்கள், காவல் துறையினர், துப்புரவு தொழிலார்கள் மற்றும் பலர் அயராது உழைக்கிறார்கள்.
இந்நிலையில் நடிகர் யோகி பாபு போலீசுக்கு உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார். வீட்டின் அருகில் போலீஸ் காவலர்கள் யாரேனும் கண்காணிப்பு பணியில் நின்றிருந்தால் குடிக்க தண்ணீர் கொடுத்து உதவுங்கள் என்றும், பெண்காவலர்கள் இருந்தால் அவர்களை உங்கள் வீட்டின் கழிப்பறையை பயன்படுத்திக் கொள்ளுமாறு சொல்லுங்கள் என்றும் அதுவே அவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றும் நடிகர் யோகிபாபு தனது தெரிவித்துள்ளார்.