தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். கடின உழைப்பாலும், விட முயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். இவரது நடிப்பில் 2019ம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த பிகில் திரைப்படம் உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்று சுமார் 300 கோடி வரை வசூலித்தது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதிக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்கள் பலர் தங்களது ஓய்வு நேரத்தில் ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் உரையாடுகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகை மற்றும் பிக் பாஸ் புகழ் ஆர்த்தி ரசிகர்களுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பேசினார். அப்போது ரசிகர் ஒருவர் “தளபதி விஜய்” பற்றி கூறுங்கள் என்ற கேள்விக்கு “தமிழக தாய்மார்களின் செல்லப்பிள்ளை” எனவும் “தளபதி விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” எனவும் கூறியுள்ளார்.
தமிழக தாய்மார்களின் செல்ல பிள்ளை!! https://t.co/aAIlVfMTSB— Actress Harathi (@harathi_hahaha) April 1, 2020
Next Superstar🤩 https://t.co/wMeyHH2YJt— Actress Harathi (@harathi_hahaha) April 1, 2020