அருண் விஜய் மற்றும் பிரசன்னா நடித்த இயக்குனர் கார்த்திக் நரேனின் மாஃபியா, நிஜ வாழ்வில் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களை காயப்படுத்தியதில் சிக்கலில் உள்ளது. பிப்ரவரி 21 அன்று வெளியான இப்படம், அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியானது. டொரொன்டோவை சேர்ந்த சீரியல் கொலையாளி புரூஸ் மெக்ஆர்தரால் கொல்லப்பட்ட 8 பேரில் 5 பேரின் புகைப்படங்களுடன் ஒரு போலீஸ் விசாரணைக் குழுவைக் காட்டும் காட்சி இருப்பதால் இப்படம் அமேசான் பிரைம் தலத்தில் அகற்றப்பட்டுள்ளது.
கொலைகாரனால் கொல்லப்பட்டவர்களை ஒரு போதைப் பொருள் கிங்பினுடன் தொடர்புடைய நபர்களாக இந்த திரைப்படம் காண்பிப்பதால், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் OTT தளத்தில் அதைப் பார்த்து கோபப்படுகிறார்கள். டொராண்டோ ஊடகங்களில் வெளியான ஸ்கந்தராஜ் நவரத்னம், செலிம் ஈசென், அப்துல்பாசீர் பைஸி, கிருஷ்ணா கனகரட்னம் மற்றும் சோரூஷ் மஹ்முடி ஆகியோரின் புகைப்படங்கள் இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
2010 மற்றும் 2017 க்கு இடையில் எட்டு பேரை (மாஃபியா அத்தியாயம் 1 இல் காட்டப்பட்டுள்ள 5 பேர் உட்பட) கொலை செய்ததாக மெக்ஆர்தர் 2019 ஜனவரியில் ஒப்புக்கொண்டார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சார்பாக தெற்காசிய எய்ட்ஸ் தடுப்புக்கான கூட்டணியின் நிர்வாக இயக்குனர் ஹரன் விஜயநாதன் பேசுகையில் மாஃபியா திரைப்படத்தில் தவறான சித்தரிப்பால், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் கோபமடைந்துள்ளன, மேலும் லைகா புரொடக்ஷன்ஸ் அவர்களின் குடும்பங்களுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதாக கூறப்படுகிறது. டொராண்டோ சீரியல் படுகொலைகளில் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை தவறாகப் பயன்படுத்தியதற்காக அமேசான் பிரைம் வீடியோ இப்படத்தை தனது இணைய தளத்தில் இருந்து நீக்கியது.