
தல அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடிக்கும் வலிமை படம் குறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் ரகசியம் காத்து வந்த இயக்குனர் எச்.வினோத், முதன்முறையாக அப்படம் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: அஜித் நடித்ததிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் மங்காத்தா. அஜித் ரசிகர்களே அடுத்த மங்காத்தாவான வலிமையை காண தயாராகுங்கள் என குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாகவும் அது அமைந்துள்ளது.