கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பொதுமக்களும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். இதனால் தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
தற்போது நடிகர் ராகவா லாரென்ஸ் திருநங்கைகளுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், முகக் கவசம் உள்ளிட்டவற்றை வழங்கி உதவி செய்துள்ளார் .சேத்துப்பட்டு பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் சுமார் 400 பேருக்கு 10 நாட்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள், உடைகள், முகக் கவசம் ஆகியவற்றை அவர் வழங்கியுள்ளார்.