V4UMEDIA
HomeNewsBollywoodபாலிவுட் பாடகி கனிகா கபூரின் கொரொனா வைரஸ் ரிசல்ட் 5 ஆவது முறையாக பாஸிட்டிவ்!!

பாலிவுட் பாடகி கனிகா கபூரின் கொரொனா வைரஸ் ரிசல்ட் 5 ஆவது முறையாக பாஸிட்டிவ்!!

பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் இங்கிலாந்தில் இருந்து லக்னோவுக்கு வந்தபோது, கொரோனா அறிகுறி காணப்பட்டது. ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சமீபத்தில் கொரோனா உறுதி ஆனது. 

இதற்கிடையே, அவர் நடத்திய விருந்து நிகழ்ச்சியில் பா.ஜனதா எம்.பி.யும், ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜேவின் மகனுமான துஷ்யந்த் சிங் கலந்து கொண்டது தெரிய வந்துள்ளது. அதன் பிறகு அவர் நாடாளுமன்றத்துக்கும் சென்றார். இதனால், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், கனிகா கபூர் மீது அலட்சியம் மற்றும் ஒத்துழையாமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல் ஆணையர் சுர்ஜித் பாண்டே கூறும்போது, சரோஜினி நகர் காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

தற்போது கனிகாவுக்கு கொரொனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து, வசுந்தராராஜே மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அந்த பார்ட்டியில் கலந்துகொண்ட துஷ்யந்த் சிங் நாடாளுமன்றத்துக்குச் சென்று வந்ததாலும், குடியரசுத் தலைவர் ஏற்பாடு செய்த விருந்தில் கலந்து கொண்டதாலும்இந்த விவகாரம் மேலும் சிக்கலாகியுள்ளது.

Most Popular

Recent Comments