கேரளாவில் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கு அங்குள்ள விமர்சகர்கள் கில்டு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழில் சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கு வழங்கப்படுகிறது. ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருதை பெறுகிறார். இந்த படத்தை இயக்கிய தியாகராஜன் குமார ராஜா சிறந்த இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.