
சூர்யா மற்றும் ஹரியின் வெற்றி கூட்டணியில் அமையவிருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியது. இந்த அறிவிப்பை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. நடிகர் சூர்யாவின் 39வது படமாக உருவாகும் இந்த படம் ‘அருவா’ என்று பெயரிடப்பட்டது.
இயக்குநர் ஹரி இயக்க, சூர்யா நடிக்கப் பிரபல இசை அமைப்பாளர் இமான் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார் என்றும் அந்த ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது. ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் இந்த படம் வரும் 2020 தீபாவளிக்கு வெளியாகும் என்பதையும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது. இவர் தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி கதாநாயகியாக சிறந்து விளங்கி வருகிறார். கடைசியாக இவர் நடித்த “Ala Vaikunthapurramuloo” என்ற தெலுங்கு படம் தென்னிந்திய சினிமா ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.