V4UMEDIA
HomeReviewAsuraguru

Asuraguru

Review By :- V4U Media

Release Date :- 13/03/2020

Movie Run Time :- 2 Hrs

Censor certificate :- U/A

Production :- JSB Film Studios

Director :- Rajdeep

Music Director :- Ganesh Raghavendra

Cast :- Vikram Prabhu, Mahima Nambiar, Nandu Jagan, Yogi Babu

ஹீரோ விக்ரம் பிரபு சிறு வயதில் இருந்தே பணத்தை எங்கு கண்டாலும் அதை திருடும் நோயால் பாதிக்கப்பட்டவர். சிறு வயதிலேயே திருடி சீர்திருத்த பள்ளியில் வளர்க்கிறார். ஜெயிலில் இருந்து வெளி வந்ததும் திருந்தாமல் பெரிய அளவில் திருடுகிறார். ஏன் எதற்கு என்று எந்த காரணமும் இல்லாமல் பணத்தை கோடி கோடியாக கொள்ளையடிக்கிறார். டிடெக்டிவ் ஆபிஸரான ஹீரோயின் விக்ரம் பிரபு தான் திருடுகிறார் என கண்டுபிடிக்கிறார். விக்ரம் பிரபு ஏன் கொள்ளையடிக்கிறார் ? பணத்தை பறிகொடுத்த வில்லனிடம் இருந்து தப்பித்தாரா இல்லையா என்பதே மீதிக்கதை.

விக்ரம் பிரபு நன்றாக நடித்துள்ளார். காமெடி, பைட், ரொமான்ஸ் என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார். மகிமா நம்பியார் அழகாக இருக்கிறார். தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார். மகிமா சிகரெட் அடிக்கும் காட்சிகளில் நிறைய செயற்கைத்தனம். அதை தவிர்த்திருக்கலாம். விக்ரம்பிரபுவின் நண்பராக வரும் நண்டு ஜெகன், காவல் அதிகாரியாக வரும் குமரவேல், தேநீர் கடைக்காரராக வரும் யோகிபாபு ஆகியோர் சிரிக்க வைக்கிறார்கள். துப்பறியும் நிறுவனம் நடத்துபவராக வரும் ஜேஎஸ்பி சதீஷ் இயல்பாக நடித்துள்ளார்.​

வில்லன் கேரக்டர் ரொம்ப சுமார். அது தான் படத்தின் மிகப்பெரிய மைனசும் கூட. கணேஷ் ராகவேந்திராவின் இசையும் சைமன் கே.கிங்கின் பின்னணி இசையும் ஓகே ரகம். ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு பளிச்.

விக்ரம் பிரபு கொள்ளையடிப்பதற்கான காரணம் மிகவும் பலவீனமாக உள்ளது. திரைக்கதையில் இன்னும் அதிகம் கவனம் செலுத்திருக்கலாம் இயக்குனர் ராஜ்தீப்

Most Popular

Recent Comments

Review By :- V4U Media Release Date :- 13/03/2020 Movie Run Time :- 2 Hrs Censor certificate :- U/A Production :- JSB Film Studios Director :- Rajdeep Music Director :- Ganesh Raghavendra Cast :- Vikram Prabhu, Mahima Nambiar, Nandu Jagan, Yogi Babu ஹீரோ விக்ரம் பிரபு...Asuraguru