இந்திய சினிமாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகத் திகழும் பி.சி.ஸ்ரீராம், இயக்குனர் கெளதம் மேனனுடன் முதன்முறையாக இணைகிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 30 க்கும் மேற்பட்ட படங்களை ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குனர் மணிரத்னம் போன்ற பெரிய இயக்குனர்களுடன் மட்டுமே அதிகாமகப் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் மிஷ்கின் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் “சைக்கோ” படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஊரடங்கு முடிந்தவுடன் அடுத்த திட்டமாக கெளதம் மேனனுடன் ஒரு வெப் சீரியஸ் காக இணைய உள்ளேன். இந்த வலை தொடர் அமேசான் நிறுவனத்துக்கானது. கொரோனா வைரஸ் பாதிப்பு முடிந்தவுடன் வேலையைத் தொடங்க காத்திருக்கிறேன். உலகம் நம் அனைவருக்கும் சிறந்த இடமாக இருக்கும் என நம்புகிறன்” என பதிவிட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
My next project after the lock down is over will be with Gautham Menon for a web series. It’s for Amazon . Waiting to start work after a long gap due to this corona.
Hope the world will be better place for all of us .@menongautham— pcsreeramISC (@pcsreeram) June 18, 2020