Review By :- V4U Media
Release Date :- 13/03/2020
Movie Run Time :- 2.32 Hrs
Censor certificate :- U/A
Production :- Screen Scene Media Entertainment
Director :- Krishna Marimuthu
Music Director :- Anirudh – Sean Roldan – Vivek & Merlin
Cast :- Harish Kalyan, Tanya Hope, Vivek
ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற ‘விக்கி டோனர்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் “தாராள பிரபு” !
கால்பந்து வீரராக வரும் ஹரிஷ் கல்யாண், அவரது அம்மா மற்றும் பாட்டியுடன் சந்தோஷமாக வாழ்கிறார். ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை வாங்கி செட்டில் ஆக வேண்டும் என்பது தான் ஹரிஷ் கல்யாணின் லட்சியம். செயற்கை கருத்தரிப்பு மையம் நடத்தி வருபவர் விவேக். ஆரோக்கியமான விந்துள்ள நபரை தேடி அலைகிறார் விவேக். அந்த நேரத்தில் தான் விவேகிற்கு, ஹரிஷ் கல்யாண் அறிமுகம் ஆகிறார். முதலில் ஹரிஷ் பின்பு ஒத்துக்கொள்கிறார். தனது குடும்பத்துக்கும், காதலிக்கும் தெரியாமல் விந்தணு தானம் செய்து நிறைய பணம் சம்பாதிக்கிறார். ஒரு கட்டத்தில் ஹரிஷிற்கும், கதாநாயகி தன்யாவுக்கும் திருமணம் நடக்கிறது. இந்த விந்தணு தானம் செய்வதால் ஹரிஷ் கல்யாண் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனை என்ன? அதை எப்படி சமாளித்தார் என்பதே படத்தின் மீதிக் கதை.
ஹரிஷ் கல்யாண் மிக பொருத்தமான தேர்வு. படத்திற்கு படம் அவரது நடிப்பை மெருகேற்றி வருகிறார். படத்தின் மிகப்பெரிய பலமே கண்ணதாசனாக வரும் விவேக் தான். நீண்ட நாட்களுக்கு பிறகு படம் முழுவதும் ஸ்கோர் செய்கிறார். விவேக் – ஹரிஷ் இணைந்து வரும் காட்சிகள் அனைத்துமே படு சூப்பர். இவர்களது கெமிஸ்ட்ரி நல்லாவே ஒர்க் அவுட்டாகியுள்ளது. காமெடி காட்சிகளைத் தாண்டி சென்டிமென்ட் காட்சிகளில் கூட தன்னை நிரூபித்திருக்கிறார். அவருடைய சினிமா வாழ்க்கையில் இந்த தாராள பிரபு க்கு தனி இடம் உண்டு. படத்தின் நாயகியாக தான்யா ஹோப் நடிப்பில் கவர்கிறார். ஹரிஷ் கல்யாணனின் அம்மாவாக அனுபமா, பாட்டியாக சச்சு இருவருமே தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
முதல் பாதி கலகலவென ஜாலியாக செல்கிறது. இரண்டாம் பாதியில் சென்டிமென்ட் காட்சிகள் கொஞ்சம் தொய்வு அடைகிறது. அதற்கு மட்டும் எடிட்டர் கத்திரி போற்றுக்கலாம். செல்வகுமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி. அனிருத், ஷான் ரோல்டன், விவேக் – மெர்வின், மேட்லி ப்ளூஸ் என 8 இசையமைப்பாளர்கள் இணைந்து பாடல்களை உருவாக்கியுள்ளனர். ஆனால் அனிருத் இசையில் வரும் பாடல் மட்டுமே தாளம் போட வைக்கிறது. பின்னணி இசை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.
ரீமேக் படம் என மொத்தத்தையும் காப்பி பேஸ்ட் செய்யாமல், திரைக்கதையில் சில இடங்களை மட்டும் மாற்றி தரமான படத்தை தந்துள்ளார் இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து. விந்தணு தானம் பற்றி சொல்லும் படம் என்றாலும், எந்த இடத்திலும் முகம் சுளிக்கும் காட்சிகள் இல்லாமல் படத்தை எடுத்த விதத்துக்கே இயக்குனருக்கு சபாஷ் சொல்லலாம். தமிழகத்தில் விந்தணு தானம் என்பது சிலருக்கு மட்டுமே தெரியும். இந்த படத்தின் மூலம் என்ன என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளலாம். காமெடி, எமோஷன் என இரண்டையுமே தேவையான அளவிற்கு வைத்துள்ளார் இயக்குனர். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் இந்த “தாராள பிரபு”