Review By :- V4U Media
Release Date :- 13/03/2020
Movie Run Time :- 2.13 Hrs
Censor certificate :- U
Production :- 11 : 11 Productions
Director :- U Anbu
Music Director :- Rasamathi
Cast :- Sibiraj, Shirin Kanchwala, Natty Natraj, Samuthirakani, Riythvika, Yamini Sundhar
கும்பகோணத்தில் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார் நாயகன் சிபிராஜ். அரசியல்வாதியாக இருக்கும் சமுத்திரகனியை சிபிராஜ் தலைமையிலான டீம் என்கவுண்டர் செய்கிறது. இதற்கிடையில் பிறந்த குழந்தைகள் தீடீரென காணாமல் போகிறார்கள். சிபிராஜ் தலைமையாளன டீம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். கண்டுபிடிக்கபட்ட குழந்தைகள் வீட்டிற்கு சென்றதும் இறக்கிறார்கள். குழந்தைகள் தொலைவதும், கிடைப்பதும், இறப்பதும் என தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இதற்கிடையில் சமுத்திரகனி என்கவுண்டர் செய்யப்பட்ட அதே இடத்தில் சிபிராஜ் மீது விபத்தை ஏற்படுத்துகிறார் நட்டி. தன் மீது விபத்தை ஏற்படுத்திய நட்டி யார் என்பதை விசாரிக்க ஆரம்பிக்கிறார் சிபிராஜ். நட்டி யார் ? குழந்தைகளை கடத்தியது யார் ? என்பதை சிபிராஜ் கண்டுபிடித்தாரா ? என்பதே படத்தின் மீதிக்கதை.
முந்தைய படங்களை விட அழகாகவும் துடிப்புடனும் இருக்கிறார் சிபிராஜ். காவல்துறை அதிகாரி வேடமும் உடையும் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. நாயகியாக வரும் ஷெரின் காஞ்வாலா அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பாடல் காட்சிகளில் வந்து போகிறார்.
நட்டி நட்ராஜ் வில்லனாக மிரட்டியுள்ளார். சிறிது நேரம் வந்தாலும் ஸ்கோர் செய்கிறார் சமுத்திரக்கனி. ரித்விகா, சனம் ஷெட்டி, அபிஷேக், யாமினி சுந்தர் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர்.
கும்பகோணம் நகரத்தை அவ்வளவு அழகாக காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் இராசாமதி. அவரது ஒளிப்பதிவு படத்துக்குப் பலம். தர்மபிரகாஷின் இசையில் பாடல்கள் & பின்னணி இசை ஓகே ரகம்.
மெடிக்கல் கிரைம் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் அன்பரசன். பார்த்து பழக்கப்பட்ட கதை தான் ஆனால் கதை சொன்ன விதம் அருமை திரைக்கதையை இன்னும் கொஞ்சம் நன்றாக எழுதிருக்கலாம். படத்தின் இறுதி காட்சியில் அரசியல்வாதிக்கு கொடுக்கும் தண்டனை புதுமை.