Review By :- V4U Media
Release Date :- 28/02/2020
Movie Run Time :- 2.42 Hrs
Censor certificate :- U
Production :- VIACOM18 STUDIOS & ANTO JOSEPH FILM COMPANY
Director :- DESINGH PERIYASAMY
Music Director :- MASALA COFFEE & HARSHA VARDHAN RAMESHWAR
Cast :- DULQUER SALMAAN | RITU VARMA | RAKSHAN | NIRANJANI AHATHIAN | GAUTHAM VASUDEV MENON
நாயகன் துல்கர் மற்றும் அவரது நண்பரான ரக்ஷன் ஆன்லைனில் பொருட்களை வாங்கி அதில் உள்ள உதிரி பாகங்களை திருடி மீண்டும் ஆன்லைனில் விற்று பணம் சம்பாதித்து குடி, கேமிங் என ஜாலியாக வாழ்கின்றனர். இந்நிலையில் ரித்து வர்மாவை பார்த்ததும் காதல் கொள்கிறார் துல்கர். துல்கர் காதலை ரிது வர்மாவும், ராக்ஷனின் காதலை ரித்து வர்மாவின் தோழியான நிரஞ்சனி ஏற்று கொள்கிறார்கள்.
இதுவரை அடுத்தவரின் பணத்தை ஏமாற்றி சம்பாதித்தது போதும், இனியாவது தனது காதலிகளுடன் புதிய வாழ்க்கையை தொடங்கலாம் என கோவா செல்கிறார்கள். இந்நிலையில் இவர்களது திருட்டு தனத்தால் பாதிக்கப்பட்ட காவல்துறை உயர்அதிகாரி கௌதம் மேனன் இவர்களை பிடிக்க தனிபடையுடன் கோவா செல்கிறார். கோவாவிற்கு சென்ற பின்னரே காதலிகளின் உண்மை சுயரூபத்தை துல்கர் & ராக்ஷன் அறிகின்றனர். அதன்பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
மலையாளத்தில் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடிக்கும் படமாக இப்படம் அமைந்துள்ளது. ரித்து வர்மா அழகாக உள்ளார். இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். Rakshan சிறந்த தேர்வு அவரது ஒன்-லைன் காமெடிகள் கை தட்டல்கள் அள்ளுகிறது. முக்கியமாக மொபைலில் சூழ்நிலைக்கு ஏற்ப பாட்டை போட்டு பீல் பண்ணுவது லாம் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்கிறார். ‘காதல் கோட்டை’ இயக்குனர் அகத்தியன் அவர்களின் மகளான நிரஞ்சனியின் கதாப்பாத்திரமும், நடிப்பும் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. இடைவேளை ட்விஸ்ட் யாரும் எதிர் பார்க்காதது.
கவுதம் மேனன் நடிப்பில் அசத்தியுள்ளார். நடை, உடை, பேசும் தோரணை என நிஜ போலீஸ் போல மிரட்டியுள்ளார். நடிப்பிலும் ஸ்டைலிஷ் கலந்து தனது டிரன்ட்மார்க் குரலில் மிரட்டியுள்ளார். படம் இயக்குவது மட்டும் இல்லாமல் இது போல நல்ல கதைகளை தேர்வு செய்து அவர் நடிக்க வேண்டும்.
மிகசரியான அளவில் காதல், நகைச்சுவை, திரில்லர் ஆகியவற்றை இயக்குநர் தேசிங் பெரியசாமி கச்சிதமாக கொடுத்துள்ளார். திரைக்கதை சொன்ன விதத்துக்கே அவரை பாராட்டலாம். முதல் 30 நிமிடங்கள் வழக்கம் போல் காதல், பாட்டு என்று ஜாலியாக செல்கிறது அதன்பின் படம் விறுவிறுப்பாக போகிறது. கதைக்களமும், திரைக்கதையும் பிரெஷாக உள்ளது. விறுவிறுப்பு டுவிஸ்ட் என என்டர்டைன்மென்டிற்கு பஞ்சமில்லை.
சென்னை, டெல்லி, கோவா என அனைத்து லொகேஷனையும் மிக கலர்புல்லாக காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் பாஸ்கரன். “மசாலா காபி” ஹர்ஷாவரதன் ரமேஸ்வர் பின்னணி இசை படத்துக்கு பலம்.
கண்களை மட்டும் இல்ல மனதையும் கொள்ளை அடிக்கும் இந்த “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”