Review By :- V4U Media
Release Date :- 28/02/2020
Movie Run Time :- 2.13 Hrs
Censor certificate :- U
Production :- Shankar Movies International
Director :- Disney
Music Director :- K.S.Manoj
Cast :- Santhosh Prathap, Archana, Ganja Karuppu, Madhusudhana Rao, Nishant, Anitha Sampath, ‘Porali’ Dileepan
நாயகன் சந்தோஷ் பிரதாப் சிறிய அளவில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். தனது கடின உழைப்பால் உயர்கிறார். தாய் – தந்தை இல்லாமல் அனாதையாக இருக்கும் மூன்று குழந்தைகளை தத்தெடுத்து சொந்த மகன்களாக வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடைக்கு திருட வரும் கஞ்சாகருப்பு, திருந்தி சந்தோஷின் உதவியாளர் ஆகிறார். நல்ல முறையில் ஹோட்டல் வளர்ந்து வரும் நிலையில், தாதாவான மதுசூதனன் கண்ணை உறுத்த ஹோட்டலை பறிக்க முயற்சி செய்கிறார். ஆனாலும் சந்தோஷிடம் இருந்து ஹோட்டலை பறிக்க முடியவில்லை.
திருமணம் செய்தால், தத்தெடுத்து வளர்க்கும் மகன்களை பிரித்து விடுவார் என சந்தோஷ் தனது காதலியான அர்ச்சனாவையும் ஒதுக்கி வைக்கிறார். கடைசிவரை திருமணம் செய்து கொள்ளாமல் மகன்களுக்காக வாழ்கிறார் சந்தோஷ். ஆனால் மகன்களோ வளர்ந்த பின்பு, தந்தையிடமிருந்து சொத்தை பறித்துக்கொண்டு சந்தோசை நடுரோட்டில் விடுகின்றனர். மகன்கள் செய்த துரோகத்தில் இருந்து சந்தோஷ் மீண்டு வந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் சந்தோஷ் இதுவரை காட்டாத வித்தியாசமான நடிப்பை வெளிக் காட்டியுள்ளார். 25 வயது இளைஞனாகவும் சரி, 60 வயது முதியவராகவும் சரி ஒருசேர காட்டியுள்ளார் சந்தோஷ். கஞ்சா கருப்பு படம் முழுவதும் சந்தோஷ் கூடவே வருகிறார்.
நாயகியாக வரும் அர்ச்சனா காதல் செய்யும் போது சரி, திடீரென்று மாறும் போதும் சரி நடிப்பால் கவர்ந்துள்ளார். மகன்களாக வரும் 3 பேரும், வில்லன் லால் ஆகியோர் கொடுத்த ரோலை சரியாக செய்துள்ளார்.
இரண்டாம் பாதியில் வரும் பெரும்பாலான காட்சிகள், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த அண்ணாமலை & சரத்குமார் நடித்த சூர்யவம்சம் படத்தின் காட்சிகளை நினைவுபடுத்துகின்றன. இசையமைப்பாளர் கே.எஸ்.மனோஜ் பாடல்கள் & பின்னணி இசை ஓகே ரகம்.
இரும்பு மனிதன் – மகன்களை நம்பும் பெற்றோர்களுக்கு ஏற்படும் நிலைமையை கூறியிருக்கிறார் இயக்குனர் டிஸ்னி.