V4UMEDIA
HomeReviewKanni Maadam

Kanni Maadam

Review By :- V4U Media

Release Date :- 22/02/2020

Movie Run Time :- 2.12 Hrs

Censor certificate :- U/A

Production :- Rooby Films

Director :- Bose Venkat

Music Director :- Hari Sai

Cast :- Sriram Karthick, Chaya Devi, Vishnu Ramasamy, Adukalam Murugadoss, Gajaraj, Super Good Subramaniyan, Valeena Prince, Mime Gopi, Priyanka Robo Shankar

பணக்கார வீட்டு பையனும், ஏழை வீட்டு பெண்ணும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டு ஊரை விட்டு ஓடி போய் வேறு ஊரில் பிழைக்கிறார்கள். ஓடி வந்த ஜோடியை தேடி வந்து கொல்ல நினைப்பவர்களை ஹீரோ எப்படி சமாளித்தார் என்பதே மீதிக்கதை. போஸ் வெங்கட் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் இது. மிகவும் சென்சிடிவான கதைக்களத்தை மிக சுலபமாக கையாண்டுள்ளார் போஸ் வெங்கட்.

அறிமுக நடிகர்களான ஸ்ரீராம் கார்த்திக், விஷ்ணு ராமசாமி மிக சரியான தேர்வு. சாயா தேவி படத்தின் மிகப்பெரிய பலம் என்றே சொல்லலாம் அந்த அளவுக்கு முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

ஆடுகளம் முருகதாஸ், சூப்பர் குட் சுப்ரமணியன், ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா என அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்துள்ளனர். இனியன் ஹாரிஸ் ஒளிப்பதிவு பளிச். ஹரி சாய் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், வசனம் இல்லாத இடத்தில் கூட தனது பின்னணி இசையால் அழ வைக்கிறார் இசையமைப்பாளர் ஹரி சாய்.

திரைக்கதை இன்னும் நன்றாக இருந்திருந்தால் மிகச்சிறப்பான படமாக வந்திருக்க வேண்டிய கதை.

மதம் மனிதனை மிருகமாக்கும், ஜாதி மனிதனை சாக்கடையாக்கும் என்ற பெரியாரின் கருத்தை மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளார் இயக்குனர் ! சபாஷ்

Previous article
Next article

Most Popular

Recent Comments

Review By :- V4U Media Release Date :- 22/02/2020 Movie Run Time :- 2.12 Hrs Censor certificate :- U/A Production :- Rooby Films Director :- Bose Venkat Music Director :- Hari Sai Cast :- Sriram Karthick, Chaya Devi, Vishnu Ramasamy, Adukalam Murugadoss, Gajaraj, Super...Kanni Maadam