Review By :- V4U Media
Release Date :- 21/02/2020
Movie Run Time :- 1.51 Hrs
Censor certificate :- U/A
Production :- GS Arts & First Clap Entertainment
Director :- Jegan Rajshekar
Music Director :- Navin Ravindran
Cast :- Natty Natraj, Ananya, Ashwath, Lal, Marimuthu
அன்பான மனைவி, அழகான குழந்தை, நல்ல வேலை, சொந்தவீடு என்று மகிழ்ச்சியாக வாழ்கிறார் நட்டி நட்ராஜ். சந்தோசமாக வாழும் அவர்கள் வாழ்க்கையில் ஒரு நாள் பெரும்புயல் வீசுகிறது. அந்த பிரச்னையை எப்படி எதிர் கொள்வது ? பிரச்னையில் இருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதே காட்ஃபாதர் படத்தின் கதை.
மிடில் கிளாஸ் குடும்ப தலைவனாக மிக சரியாக பொருந்தியுள்ளார் நட்டி நட்ராஜ். மனைவியிடம் அன்பாக இருக்கும் காட்சியிலும் சரி, மகனைக் காக்கும் போராட்டத்தின் போதும் சரி மிகவும் எதார்த்தமாக நடித்துள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் “நீங்க எத்தனை பேர் இருக்கீங்கன்னு தெரியாது, ஆனா நீங்க இருக்கிறது என் வீடுடா” எனும் போது கெத்து காட்டுகிறார் நட்டி.
நாயகி அனன்யா தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்துள்ளார். சிறுவன் அஷ்வத் மிகச்சரியான தேர்வு. தமிழ் சினிமாவில் சிறுவன் அஷ்வத் க்கு மிகப்பெரிய இடம் காத்திருக்கிறது.
வில்லனாக நடித்திருக்கும் லால் & போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் மாரிமுத்துவின் நடிப்பு மிரட்டலாக உள்ளது.
ஒவ்வொரு சீனையும் செத்துகியுள்ளார் ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம். நவீன் ரவீந்திரனின் இசையில் பாடல்கள் ஓகே ரகம் ஆனால் பின்னணி இசை திக் திக் கென மிரள வைக்கிறது.
படம் முழுவதும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்புக்குலயே நடந்தாலும் விறுவிறுப்பாக கதை நகர்கிறது. ஒருவரிக்கதையை வைத்துக்கொண்டு ஒரு முழுநீளத் திரைப்படம் தந்திருக்கிறார் இயக்குநர் ஜெகன்ராஜசேகர். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒளிப்பதிவு & பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய பலம்.