Review By :- V4U Media
Release Date :- 14/02/2020
Movie Run Time :- 2.18 Hrs
Censor certificate :- U
Production :- Avni Movies | Rockfort Entertainment
Director :- Raana
Music Director :- Hip Hop Aadhi
Cast :- Hip Hop Tamizha, Ishwarya Menon, KS Ravikumar, Padava Gopi, Ravi Mariya, Munishkanth, Sara
ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள மூன்றாவது படம் ‘நான் சிரித்தால்’ . சிரிக்கும் நோயுடைய ஹிப் ஹாப் ஆதி தொலைந்துபோன தனது நண்பனை தேடும் போது எதிர்பாராதவிதமாக ரவுடி கே.எஸ்.ரவிக்குமாரிடம் மாட்டிக்கொள்கிறார். அதுமட்டுமின்றி அவரை போலீஸிடமும் எதிர்பாராதவிதமாக சிக்க வைக்கிறார். இதனால் ஹிப் ஹாப் ஆதியை கொலை செய்ய வில்லன் முயற்சிப்பதும், அந்த வில்லனிடமிருந்து சிரிக்கும் நோயுடைய ஆதி தப்பித்தாரா இல்லையா என்பதை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
அப்பாவி இளைஞர் காந்தி என்ற கேரக்டரில் கன கச்சிதமாக பொருந்தியுள்ளார் ஹிப் ஹாப் ஆதி. சோகமான காட்சிகளில் கூட சிரிக்கும் அவரது அப்பாவித்தனம் ஒரு நோயாக இருந்தாலும் சுற்றி உள்ளவர்களுக்கு அது அநாகரீகமாக தெரிவதும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்த காட்சிகளும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. நாயகி ஐஸ்வர்யா மேனன் காதல் காட்சிகளில் மட்டும் வந்து சென்றாலும் அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது.
ஆதியின் தந்தையாக வரும் படவா கோபி தனது கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் ரவி மரியா ஆகியோர் வில்லன் கதாபாத்திரங்களில் கச்சிதமாக நடித்துள்ளனர். ஷாரா, முனிஷ்காந்த், யோகி பாபு (கேமியோ ரோல்) என படத்தில் நட்சத்திரப் பட்டாளம் நிறைய. எல்லோருமே தங்கள் பங்கிற்கு ஜொலித்துள்ளார்கள்.
20 நிமிட குறும்படத்தை, இரண்டு மணி நேர திரைப்படமாக மாற்றிய இயக்குனர் ராணாவுக்கு உண்மையில் பாராட்டு சொல்லத்தான் வேண்டும். ஹிப் ஹாப் தமிழாவின் பாடல்கள் வழக்கம்போல் அனைவரையும் கவர்ந்து விடுகின்றன. வாஞ்சி நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு கை கொடுத்துள்ளது மற்றும் ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் படத்தை இன்னும் கொஞ்சம் ட்ரிம் செய்திருக்கலாம்.
நான் சிரித்தால் – “சிரிக்கலாம்”