
Review By :- V4U Media
Release Date :- 14/02/2020
Movie Run Time :- 2.34 Hrs
Censor certificate :- U/A
Production :- Axess Film Factory
Director :- Aswath Marimuthu
Music Director :- Leon James
Cast :- Ashok Selvan, Ritika Singh, Vani Bhojan, Sara, MS Bhaskar
தவறான முடிவு எடுக்கும் அசோக் செல்வனுக்கு , கடவுள் இரண்டாவது வாய்ப்பு கொடுக்கிறார். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினரா இல்லையா என்பதே “ஓ மை கடவுளே” படத்தின் கதை.
அசோக் செல்வனின் மிகச்சிறந்த, அர்ப்பணிப்பு மிக்க நடிப்பு இப்படத்திற்கு பிறகு வெகுவாக பேசப்படும். ரித்திகா சிங்கின் துடிப்பான நடிப்பு அவரை அனைவர் மனங்களிலும் குடியிருக்கச் செய்யும். வாணி போஜன் தனது அழகான, இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார். சாரா அற்புதமான பங்கை அளித்துள்ளார்.
கடவுளாக நடித்துள்ள விஜய் சேதுபதி சிறிது நேரம் வந்தாலும் நடிப்பால் நமது மனதில் இடம் பிடிக்கிறார். துணை கடவுள் ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர், சந்தோஷ் பிரதாப், கஜராஜ் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்கள் & பின்னணி இசை ஓகே ரகம். ஒளிப்பதிவாளர் விது ஐய்யன்னா காட்சிகளை கண்களுக்கு விருந்தாகியுள்ளார்.
இப்படம் புதிதாக காதலிக்கும் இளைஞர்கள், காதலில் வெகு காலம் பயணம் செய்பவர்கள், காதல் தம்பதியர் என அனைவருக்கும் வாழ்வின் பார்வையை மாற்றித்தரும் பெரு விருந்தாக அமையும். சாதாரண ஒன்-லைனை வைத்து கொண்டு தனது திரைக்கதையால் மேஜிக் செய்துள்ளார் இயக்குனர் அஸ்வத். சின்ன சின்ன வசனங்களுக்கு கூட நிறைய ஒர்க் செய்துள்ளனர்.
“ஓ மை கடவுளே” – காதலர்களுக்கு மட்டும் இல்ல, SINGLES க்கும் பிடிக்கும் !