Review By :- V4U Media
Release Date :- 07/02/2020
Movie Run Time :- 2.04
Hrs Censor certificate :- U/A
Production :- Vels International Films
Director :- Rathina Shiva
Music Director :- D Imman
Cast :- Jiiva, Varun, Riya Suman, Sathish, Chandhini, Gayathri, Navdeep
மாயவரத்தில் லோக்கல் டிவி சேனல் நடத்தி வரும் ஜீவாவுக்கும், தொகுதி எம்.எல்.ஏ.வுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. முன்விரோதம் காரணமாக ஜீவாவை கொல்ல சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி வருணை மாயவரத்திற்கு அழைக்கிறார்.
தன்னை கொல்ல வந்த வருண் தன் தங்கையின் உயிரை காப்பாற்றிவிட்டு சென்னை செல்கிறார். அவருக்கு நன்றி சொல்ல சென்னை புறப்படுகிறார். சென்னையில் ஜீவா சந்திக்கும் பிரச்சனைகள் என்ன ? இந்த கொலை முயற்சிக்கான காரணம் என்ன? பின்னணியில் யார் உள்ளனர் என்பதை ஜீவா கண்டுபிடித்தாரா என்பதே படத்தின் மீதிக்கதை.
ஆக்ஷன், சென்டிமெண்ட் என நடிப்பில் அசத்தி இருக்கிறார் ஜீவா. அண்ணன்-தங்கை பாசம், நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்குமிடம் என சிறப்பாக நடித்துள்ளார் ஜீவா. கதாநாயகி ரியா சுமன் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். சதீஷ் சிறிது நேரம் வந்தாலும் சிரிக்க வைக்கிறார்.
ஜீவா க்கு அடுத்து, படத்தில் முக்கியமான கதாபாத்திரம் வருண் தான். இந்த படத்துக்காக 20கிலோ எடை ஏற்றி நடித்துள்ளார். முந்தைய படங்களை விட நடிப்பில் இதில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். சென்னை ரவுடிக்கான வில்லத்தனமான பார்வை, நடை என அப்படியே பிரதிபலித்திருக்கிறார்.
மாயவரத்தின் அழகையும், சென்னை வியாசர்பாடியின் இருண்ட பக்கங்களையும் ஒன்று சேர ஒளிப்பதிவாளர் பிரசன்ன குமார் பதிவு செய்துள்ளார். டி.இமானின் இசையில் ‘செவ்வந்தியே மதுவந்தியே’ & ‘வா வாசுகி’ பாடல் மனதை உருக்குகிறது. பின்னணி இசை ஓகே ரகம்.
‘றெக்க’ இயக்குனர் ரத்னா சிவாவின் இரண்டாவது படம். நல்ல கமர்ஷியல் கதை, திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
சீறு – சீறும் !