V4UMEDIA
HomeNewsலாக்டவுனில் நான் கற்று கொண்ட பாடம் ! நடிகை சமந்தா வெளியிட்ட வீடியோ !

லாக்டவுனில் நான் கற்று கொண்ட பாடம் ! நடிகை சமந்தா வெளியிட்ட வீடியோ !

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. 2019ம் ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் “விண்ணைத்தாண்டி வருவாயா” தெலுங்கு ரீமேக்கான “ஏ மாய சேஸாவே” ஷூட்டிங் முதலே நண்பர்களாக இருந்து பின் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

Image

கொரோனா ஊரடங்கு உத்தரவினால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் வீட்டிலிருக்கும் நடிகை சமந்தா போர் அடிக்காமல் இருக்க புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் செடிகள் நடுவது, ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் உரையாடவுது என பிஸியாக வைத்துள்ளார்.

வீட்டில் இருந்தபடியே மிக சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சுலபமான முறையில் வீட்டில் இருந்தபடியே விவசாயம் செய்வதறகான சூப்பர் டிப்ஸ் கொடுத்தார்.

அத்துடன் கிரீன் இந்திய சேலஞ் மூலம் வீட்டில் தனது மாமனாரும் நடிகருமான நாகர்ஜூனாவுடன் மரக்கன்று நட்டு அதை மற்றவர்களையும் பின்பற்ற சொன்னார்.

இந்நிலையில் லாக்டவுனில் தான் கற்ற்றுக்கொண்ட பல விஷயங்கள் குறித்து நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “உங்கள் சொந்த உணவை வளர்ப்பது உங்கள் சொந்த பணத்தை அச்சிடுவது போன்றது. இந்த கொரோனா லாக்கடவுன் எனக்கு ஒரு புதிய உணவு முறையையும் ஒரு புதிய பொழுதுபோக்கையும் கற்று தந்துள்ளது. நான் என் சொந்த வீட்டில் என் சொந்த உணவை வளர்க்க கற்றுக்கொண்டேன். ஒரு பதற்றமான அனுபவம் தான் ஆனால் மகிழ்ச்சி அடைகிறேன்” என கூறியுள்ளார்.

Previous article
Next article

Most Popular

Recent Comments