Review By :- V4uMedia Team
Release Date :- 15/01/2020
Movie Run Time :- 2.22 Hrs
Censor certificate :- U
Production :- Sathya Jyothi Films
Director :- Durai Senthilkumar
Music Director :- Vivek – Mervin
Cast :- Dhanush ,Sneha , Mehreen Pirzada ,Naveen Chandra Nassar ,Munishkanth, Aravind Akash , KPY Sathish KPY Kothandam
சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்து சுற்றி வருபவர் பட்டாஸ் என்கிற சக்தி(தனுஷ்), அப்போது எதிர்வீட்டு பெண்ணாக வரும் கதாநாயகியுடன்(மெஹ்ரீன்) காதல் என படம் செல்கிறது. மற்றொரு பக்கம் கொலை குற்றத்திற்காக சிறை சென்ற கன்னியாகுமரி (சினேகா) சிறையிலிருந்து வெளிவருகிறார். அப்போது அவருக்கு ஏற்படும் ஒரு ஆபத்திலிருந்து தனுஷ் காப்பாற்ற, அப்போதுதான் சிறுவயதில்
துளைத்த பையன் தான் இந்த பட்டாஸ் என சினேகாவிற்கு தெரிய வர பிளாஸ்பேக் ஆரம்பமாகிறது. உண்மையிலே இவர்கள் வாழ்கையில் நடந்தது என்ன? இறுதியில் வில்லனாக வருபவர் அழிக்கப்பட்டாரா? என்பதே மீதிக் கதை.
விமர்சனம்: தமிழர்களின் தற்காப்பு கலைகளில் ஒன்றான அடிமுறை என்ற சண்டை முறையை கதையின் மையமாக வைத்து உருவாக்கியுள்ளார் இயக்குனர். இப்படத்தின் மூலம் அடிமுறை என்ற நமது பாரம்பரிய முறை அனைவரிடமும் சென்றிருக்கிறது கூடுதல் சிறப்பு. கதையின் நாயகனான தனுஷ், பட்டாஸ் & திரவியம் பெருமாள் என்ற இருகதாப்பாத்திரங்களிலும் வழக்கமான தனது முத்திரையை பதித்துள்ளார். ஜாலியாக சுற்றி திரியும் துருதுறு இளைங்கனாகவும் மற்றொரு பக்கம் அடிமுறை பயிற்சி கற்றுக்கொடுக்கும் ஆசானாகவும் கட்சிதமாக அசத்தியுள்ளார். ‘சில் ப்ரோ’
பாடலில் நடனம் மிக அருமை(வேகம்).சினேகா, உண்மையை சொல்லபோனால் முதற்பாதியில் கொஞ்சம் தொய்வு ஏற்படும்போது படத்தை திசை திருப்பும் பாத்திரமாக அமைந்துள்ளது சினேகாவின் கன்னியாகுமரி கதாப்பாத்திரம், நடிப்பிலும் தைரியம் கலந்த முழுமை. மெஹ்ரீன் அழகில் கவர்ந்தாலும் நடிப்பில் கொஞ்சம் முயற்சி செய்திருக்கலாம். மற்ற கதாப்பாத்திரங்களும் ஓகே ரகம்தான். விவேக்-மெர்வின் இசை கலகலப்பாக சில இடங்களில் பிடிக்கும்படி அமைந்துள்ளது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவிற்கும், கலை இயக்குனருக்கும் கூடுதல் பாராட்டுக்கள்.
நாம் சினிமா பார்க்க ஆரம்பித்த காலத்திருந்து பலமுறை பார்த்து சலித்த கதை தான், ஆனால் அடிமுறை என்ற கலையை கையிலெடுத்து படமாக்கியதற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள். படத்தின் குறையாக பல விஷயங்கள் அமைந்துள்ளது, பிளாஷ்பேக் காட்சிக்கு இருந்த அந்த அழுத்தம், சுவாரஸ்யம் மற்ற காட்சிகளில் குறைவு கூடவே தொய்வு. நாம் பார்த்து சலித்த கதை என்பதால் கிளைமாக்ஸ் வரையிலும் அடுத்து என்ன? என்கிற ஆவலே இல்லை. இறுதியாக, தற்காப்பு கலையை மீண்டும் உயிர் பெற செய்த முயற்சிகாகவும், பொழுதுபோக்கு அம்சத்திற்காகவும் பார்க்கலாம்.