Review By :- V4uMedia Team
Release Date :- 27/12/2019
Movie Run Time :- 2.15 Hrs
Censor certificate :- U
Production :- V. T. Rethishkumar
Director :- L. G. Ravichander
Music Director :- Jithesh Murugavel
Cast :- Santhosh Prathap, Chandini Tamilarasan, Sujatha
சந்தோஷ் பிரதாப், சாந்தினி ,இன்னசன்ட்,ஜி,எம்.குமார்,சுஜாதா,கோவிந்த மூர்த்தி .சாந்தி வில்லியம்ஸ் ,டி .பி.கஜேந்திரன்,
வாழ்க்கையில் ஒரு சுகமான சுமையை சுமக்க வேண்டிய கட்டாயத்தை சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரவீந்தர். 1996 ஆம் ஆண்டு நிகழ்ந்த கதை என்பதால் முடிந்தவரை செட் பிராப்பர்ட்டிஸ்களில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள் , நாயகனின் வீட்டில் இயக்குநர் விக்ரமனின் படம் ,அந்தக்கால பொம்மை சினிமா இதழ்களில் வெளியான சிவாஜி கணேசனின் அட்டைப்படம்.இப்படி…சில பல அடையாளங்கள்.
நாயகன் சந்தோஷ் பிரதாப் தன்னுடைய கைக்குழந்தைக்கு ஒரு வேளை பால் வாங்க படுகிற அவஸ்தை மனதை பிசைகிறது. அந்த குழந்தையின் பசி தீர்த்த கதை கண்ணீரை வரவழைக்கும். நாயகி சாந்தினி கலங்கிய மனதுடன் “வெந்நீரில் சீனியை கலந்து கொடுத்துட்டேங்க.தூங்கிட்டான்.”என்பது உதவி இயக்குநர்களின் வாழ்க்கையில் ஒரு அத்தியாயம்.
கேமராமேன் ஆர்.எஸ்.செல்வா .ஆர்ட் டைரக்டர் ஜெய்காந்த் இருவரும் கூடியவரை அந்த காலத்து சூழலை காட்டியிருக்கிறார்கள். இசை அமைப்பாளர் ஹித்தேஷ் முருகவேல் இசை ஓகே .