Review By :- V4uMedia Team
Release Date :- 27/12/2019
Movie Run Time :- 1.52 Hrs
Censor certificate :- U/A
Production :- Positive Print Studios
Director :- Pavel Navageethan
Music Director :- Pavel Navageethan
Cast :- Ram Arun Castro ,Vishnupriya ,Gayathri , Lijeesh ,Mime Gopi, Linga
கதைக் களம்: படத்தின் துவக்கமே இளம் பெண் ஒருவர் மர்மநபரால் கொலை செய்யப்படுகிறார், இந்த ‘வி1 மர்டர் கேஸ்’ போலீசிற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. இதனால் உதவிக்காக ஃபோரன்சிக் டிபார்ட்மெண்டை சேர்ந்த ராம் அருண் கேஸ்ட்ரோவை அழைக்க, அவரும் போலீஸ் அதிகாரியான விஷ்ணு பிரியாவுடன் சேர்ந்து கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே த்ரில்லரான மீதிக்கதை.
விமர்சனம்:மெட்ராஸ், குற்றம் கடிதல், பேரன்பு படங்களில் நடிகராக சினிமாவில் காலடி வைத்த பாவல் நவகீதன் இப்படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார். அதுவும் கிரைம் இன்வெஸ்டிகேஷன் கதையை மிக சுவாரஸ்யமாக கையாண்டுள்ளார். முன்னணி பாத்திரங்களாக நடித்துள்ள ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் விஷ்ணுப்ரியா ஆகியோரின் நடிப்பு மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ளது.
மர்டர் மிஸ்ட்ரி, கிரைம் இன்வெஸ்டிகேஷன் எதுவாக இருந்தாலும் படத்தின் களம் கிட்டத்தட்ட ஒரேமாதிரி தான் இருக்கும். ஆனால் இப்படத்தில் சற்று வித்தியாசமாக ஃபோரன் சிக் டிபார்ட்மெண்ட், ஒரு கொலையை கண்டுபிடிக்க எந்த அளவு உதவி புரிகிறது என் சேர்த்திருப்பது அருமை. கிட்டத்தட்ட ஃபோரன் சிக் டிபார்ட்மெண்ட்டை பாடமாகவே எடுத்துள்ளார் இயக்குனர். கிருஷ்ண சேகர் ஒளிப்பதிவும், ரோனி ராபல் இசையும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. படத்தின் குறையாக தெரிவது கொலைகாரன் சொல்லும் காரணத்தையும், அவரது நடிப்பிலும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். மற்றபடி நல்லதொரு க்ரைம் த்ரில்லர் படமாகவே அமைந்துள்ளது இந்த ‘வி1 மர்டர் கேஸ்’.