
Review By :- V4uMedia Team
Release Date :- 20/12/2019
Movie Run Time :- 2.29 Hrs
Censor certificate :- U/A
Production :- Parallel Minds Productions , Viacom 18 Motion Pictures
Director :- Jeethu Joseph
Music Director :- Govind Vasantha
Cast :- Karthi , Jyothika , Ammu Abhirami , Sathyaraj , Nikhila Vimal , Anson Paul , Ilavarasu , Sowcar Janaki , Seetha , Master Ashwanth Ashokkumar , Semmalar Annam , Bala , Hareesh Peradi , Ramesh Thilak Matthew Varghese
கதைக்களம்:
அரசியல் பிரமுகராக வரும் சத்யாராஜ், அவரது மகளாக ஜோதிகா(பார்வதி). சத்யராஜின் மகன் ஒருவன் சிறுவயதிலே காணாமல் போக கதை ஆரம்பமாகிறது. மறுபுறம் கோவாவில் சில சில திருட்டு வேலைகள் செய்து ஜாலியாக பிழைப்பு நடத்தி வருகிறார் கார்த்தி. ஒரு கட்டத்தில் போலிஸ் ஒருவரால் சிறுவயதில் காணமல் போன மகன் கார்த்தி என்று சத்யராஜிடம் கூற, தனது வீட்டிற்கு அழைத்து செல்கிறார் சத்யராஜ். இதனையடுத்து சத்யராஜ் அரசியல் வாழ்க்கையினால் ஏற்படும் பிரச்னைகள்? கார்த்தியின் உயிருக்கும் இடையில் கொலை ஆபத்து வருகிறது. இறுதியாக தொலைந்துபோன தம்பி கார்த்தி தானா? யார் இவரை கொலை செய்யப் பார்த்தார்கள்? கார்த்தியின் சாமர்த்தியம் என்ன? என்ற சஸ்பென்சே மீதிக் கதை.

விமர்சனம்:
‘கைதி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கார்த்தி படங்கள் மீதிருந்த எதிர்ப்பார்ப்பு ஒருபடி அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது தம்பி, மேலும் இப்படத்தில் கார்த்தி – ஜோதிகா – சத்யராஜ் என்ற கூட்டணி வேறு சொல்லவா வேண்டும்! முதலில் திருடனாகவும், பிறகு தம்பியாக எமோஷனல், ஆக்ஷன், ஜாலி என கலக்கியுள்ளார் கார்த்தி. பாசமும், ஏக்கமும் நிறைந்த அக்காவாக ஜோதிகா செட்டிலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல் சத்யராஜ், சீதா, பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு பலம். கார்த்திக்கு ஜோடியாக வரும் நிகிலா விமல் மற்றும் குட்டி ஜோதிகாவாக அம்மு அபிராமி என பலர் இப்படத்தில் கலக்கியுள்ளனர்.

மேட்டுப்பாளையம் உள்ளிட்ட மலை சார்ந்த ஏரியாக்களை அதே குளிர்ச்சியோடு நம்மால் கடத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் R.D. ராஜசேகர். கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள் & பின்னணி இசை ஓகே ரகம்தான். ஒரே கதையில் மலையாளத்தில் ‘த்ரிஷ்யம்’ அதே தமிழில் ‘பாபநாசம்’ என பெயர்வாங்கியவர் இயக்குனர் ஜீத்து ஜோசப், இப்படத்தில் திரைக்கதை மற்றும் வசனங்கள் மட்டுமே இவர் செய்திருந்தாலும் எமோஷனல், டுவிஸ்ட் என தனது டிரென்ட் மார்க்கை பதிவு செய்துள்ளார். முதல் பாதி கொஞ்சம் மெதுவாக செல்வதுபோல் தோன்றுகிறது, மற்றபடி டுவிஸ்ட்கள் நிரைந்த குடும்பங்களுடன் ரசிக்கும் படமாக அமைந்துள்ளது ‘தம்பி’.
