Review By :- V4uMedia Team
Release Date :- 14/12/2019
Movie Run Time :- 2.13 Hrs
Censor certificate :- A
Production :- Green Signal
Director :- S. A. Chandrasekhar
Music Director :- Siddharth Vipin
Cast :- Jai ,Athulya Ravi , Varsha, Vaibhavi Shandilya ,Livingston, Siddharth Vipin, Sathyan, Srinivasan Devadarshini, Crane Manohar
கேப்மாரி – விமர்சனம்
நடிப்பு – ஜெய், வைபவி சாண்டில்யா, அதுல்யா
தயாரிப்பு – கிரின் சிக்னல் இயக்கம் – எஸ்.ஏ.சந்திரசேகர்
சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் ஜெய், ரயிலில் நள்ளிரவு பயணத்தில் கூட பயணிக்கும் வைபவி சாண்டில்யாவுக்கும் பீர் கொடுத்து போதையாக்கி உடல் ரீதியாக இணைகிறார். இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் இருவரும் உடனேயே திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள். திருமணம் நடந்து தனி வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
ஜெய் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அதுல்யாவுக்கு, ஜெய் மீது ஒரு தலைக் காதல். அது ஜெய்யின் திருமணத்திற்குப் பிறகும் தொடர்கிறது. ஒரு நாள் அதுல்யாவை வீட்டில் விடும் போது இருவரும் வீட்டில் பீர் குடித்து போதையாகி உடலால் இணைகிறார்கள். அதனால், தமிழ் சினிமா வழக்கப்படி அதுல்யா கர்ப்பமாகிறார்.
ஜெய், வைபவி இருக்கும் வீட்டிற்கே வருகிறார். ஒரே வீட்டில் இருவருடனும் வாழ்க்கை நடத்துகிறார் ஜெய். அடிக்கடி பிரச்சினைகள் வர அவர்கள் மூவரின் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதுதான் படத்தின் கதை.
இந்தப் படம் இளைஞர்களை கவரும் படமாக அமைந்துள்ளது . அலுவலகத்தில் வேலை பார்க்கும் சத்யன், தேவதர்ஷினி, சித்தார்த் விபின் என அனைவருமே அடிக்கடி இரட்டை அர்த்தங்களில் பேசுகிறார்கள். சித்தார்த் விபின் தான் படத்தின் இசையமைப்பாளர். பின்னணி இசை ரசிக்க வைக்கிறது . மொத்தத்தில் கேப்மாரி இக்கால இளைஞர்களை கவரும் .