V4UMEDIA
HomeReviewDhanusu Raasi Neyargale

Dhanusu Raasi Neyargale

Review By :- V4uMedia Team

Release Date :- 06/12/2019

Movie Run Time :- 2.01 Hrs

Censor certificate :- U/A

Production :- Sree Gokulam Movies

Director :- Sanjay Bharathi

Music Director :- Ghibran

Cast :- Harish Kalyan, Digangana Suryavanshi, Reba Monica John

மூடநம்பிக்கைக்கும் – முற்போக்கு சிந்தனைக்கும் இடையே நடக்கும் காதல் யுத்தம் தான் படத்தின் ஒன் லைன். சிறுவயது முதலே ஜாதகம், ஜோசியத்தில் தீவிரநம்பிக்கையுள்ளவராக கதாநாயகன் ஹரிஷ் கல்யாண்(அர்ஜுன்), (அதற்கு காரணம் தனது தந்தை ஜாதக பொருத்தம் இல்லாமல், திருமணம் செய்து கொண்டதால் தான் இறந்தார் என தாத்தா கூறியது தான்). இந்நிலையில் திருமணத்திற்கு பெண் பார்க்க துவங்கும்போது வேறு மொழி பேசும் கன்னி ராசி பெண் தான் பொறுத்தமாக இருக்கும் என அவரது ஆஸ்தான ஜோதிடர் கூறுகிறார். இப்படிபோக ஒரு நிகழ்ச்சியில் நாயகி டிகங்கனாவை(கே.ஆர்.விஜயா) பார்க்க, அவர்மீது மீது காதல் வயப்படுகிறார் ஹரிஷ். இருவரும் காதலிக்க ஆரம்பித்து நெருக்கமானாலும்,ஹரிஷ் கல்யாணிற்கு காதலியின் ராசி என்ன என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார் ஆனால் அது கதாநாயகிக்கு பிடிக்கவில்லை. இவ்வாறு இருவருக்கும்
பலவகையில் முரண்பாடு ஏற்பட முடிவில் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

Dhanusu Raasi Neyargale Movie Review

விமர்சனம்:

அரவிந்த்சாமி, மாதவன் வரிசையில் லவ்வர் பாயாக இணைந்துள்ளார் ஹரிஷ் கல்யாண். அவர் தேர்வு செய்யும் கதைகளும் அந்த வகையிலே அமைந்துள்ளது. அழகும், நடிப்பும் கவரும் விதமாக அமைந்துள்ளது. அதேபோல், அறிமுக
கதாநாயகியாக டிகங்கனா ரொமான்ஸ், கிளாமர் என முதல் படத்திலேயே கவனிக்க வைக்கிறார். இருவருமே பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் என்பது இருவருக்கும் உள்ள ஒற்றுமை.

பிகில் படத்தில் அனைவரையும் கவர்ந்த அனிதா (ரெபா மோனிகா) சில காட்சிகளே வந்தாலும் நிறைவு. மேலும், அவ்வபோது வரும் யோகிபாபு, முனீஸ்காந்த், ஜோதிடராக வரும் பாண்டியராஜன், மயில்சாமி  கதாபாத்திரங்கள் சிறப்பு .ஜிப்ரான் இசையில் இளமை துள்ளும பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரிய பலம். அதேபோல் PK வர்மாவின் கலர்ஃபுல் ஒளிப்பதிவும். காதல், ரொமான்ஸ் என்ற களத்திலிருந்து சற்று மாறவேண்டிய கட்டாயம் ஹரிஷ் கல்யாணிற்கு இருப்பது போல் சலிப்பு ஏற்படுகிறது. இறுதியாக, இளைங்கர்களை கவரும் படமாக தனுசு ராசி நேயர்களே அமைந்துள்ளது.

Previous article
Next article

Most Popular

Recent Comments

Review By :- V4uMedia Team Release Date :- 06/12/2019 Movie Run Time :- 2.01 Hrs Censor certificate :- U/A Production :- Sree Gokulam Movies Director :- Sanjay Bharathi Music Director :- Ghibran Cast :- Harish Kalyan, Digangana Suryavanshi, Reba Monica John மூடநம்பிக்கைக்கும் – முற்போக்கு சிந்தனைக்கும்...Dhanusu Raasi Neyargale