Review By :- V4uMedia Team
Release Date :- 06/12/2019
Movie Run Time :- 2.13 Hrs
Censor certificate :- U
Production :- Screen Scene Media Entertainment
Director :- V. Z. Durai
Music Director :- Girishh G.
Cast :- Sundar C. Sai Dhanshika , Sakshi Choudhary , VTV Ganesh , Yogi Babu , Shaji Chen , Vimala Raman
அழகியல் நிறைந்த கிராமம் ஒன்று திடீரென மர்மமான முறையில் இருளாகி கொலைகள் நடக்கிறது. என்ன? எப்படி? குழம்பிய நிலையில், இதை விசாரிக்க வரும் போலீஸ் இன்ஸ்பெக்டரும் இறந்துவிடுகிறார். அந்த கேஸை விசாரிக்க இன்ஸ்பெக்டர் இடத்திற்கு வருகிறார் சுந்தர்.சி, விசாரணை துவங்கியதிலிருந்து இவர் சந்திக்கும் சில அமானுஷிய விஷயங்கள், இழப்புகள்! இதிலிருந்து மீண்டு வந்தாரா? இந்த மர்மங்களுக்கு யார் காரணம்? என்பதே மீதிக் கதை.
விமர்சனம்:நீண்ட நாட்களுக்கு பிறகு கதையின் நாயகனாக சுந்தர்.சி, இன்ஸ்பெக்டராகவும் மறுபுறம் அப்பாவாகவும் கச்சிதமாக பொருந்தியுள்ளார். இவரைத் தொடர்ந்து படத்தில் அனைவரையும் கவர்ந்தது குழந்தை கதாபாத்திரமாக வரும் தியா, அவ்வளவு திறமையான நடிப்பு. விமலா ராமன், சாக்ஷி சவுத்ரி, சாய் தன்ஷிகா உள்ளிட்ட அனைவரும் கதாப்பாத்திரதிற்கேற்ற பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
கிரிஷின் பின்னணி இசையில் அரபிக் சம்பத்தப்பட்ட காட்சிகளில் மட்டுமே குறிப்பிடத்தகுந்ததாக அமைந்துள்ளது. திகில் காட்சிகளையும், படத்தில் வரும் லொகேஷன்களும், அதை படமாக்கிய விதமும் அருமை. இயக்குனர் V.Z.துரை, முகவரி, தொட்டி ஜெயா, நேபாளி உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர் தற்போது ஹாரரில் இறங்கியுள்ளார். இதுவரை நாம் பல படங்களில் பார்த்து சலித்த காட்சிகள் நிறைய இருந்தாலும் ‘ஜின்’ என்கிற புதிய களத்தை கையாண்டதுஅருமை. இறுதியாக இருட்டு, காட்சிகள் பார்த்து சலித்ததாக இருந்தாலும், புதுமாதிரியான ஹாரர் எக்ஸ்பீரியன்ஸாக அமைந்துள்ளது.