Review By :- V4uMedia Team
Release Date :- 29/12/2019
Movie Run Time :- 2.36 Hrs
Censor certificate :- U/A
Production :- Vels Film International, Ondraga Entertainment, Escape Artists
Director :- Gautham Menon
Music Director :- Darbuka Siva
Cast :- Dhanush, Megha Akash , Sasikumar , Senthil Veerasamy, Sunaina . Vela Ramamoorthy, Rana Daggubati
ரகு (தனுஷ்) பொறியியல் படிக்கும் கல்லூரியில் ஒரு படபிடிப்பு நடக்கிறது. அந்தப் படத்தின் நாயகி லேகா ( மேகா ஆகாஷ்). அந்த நடிகையை ரகு பார்க்கிறார்,கண்டதும் காதல் என்பதுபோல், காதலில் விழுகிறார். லேகாவுக்கும் ரகு மீது காதல் ஏற்படுகிறது. ஒரு நடிகையை காதலித்தால் அந்த காதலனுக்கு என்ன பிரச்சனைஎல்லாம் வரும் என்பது ரசிகர்களால் யூகிக்க முடிகிற கதை என்றாலும், அதில் இயக்குநர் கௌதம் உத்தியில் த்ரில் திரைக்கதையாக காட்டியுள்ளார்.
சுருக்கமாக சொன்னால், படத்தில் பல முடிச்சுகள். ஒரு காதலால் தனுஷின் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. அதை அவர் எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுகிறார் என்பது தான் கதை.தனுஷ் காதல் காட்சிகளாகட்டும், அதிரடி காட்சிகளாகட்டும் என்னை அடிச்சுக்க ஆளே இல்ல என்ற தோரணையில் நடித்து படத்தை தூக்கி நிறுத்துகிறார்.
மேகா ஆகாஷ் தனது அழகு மற்றும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். கவுதம் மேனன் கதையை அவருடைய பழைய ஸ்டைலில் சொல்லியிருக்கிறார். வசனமாக பேசமால் மணிக்கணக்கில் நாயகன் பேசுகிறான். மேகா ஆகாஷ் அழகு, அழுகை, பார்வை என காதலையும்சோகத்தையும் அழகாக கடத்தி விடுகிறார். சுனைனா பல காட்சிகளில் வந்தாலும் அவரும் ஒரு பார்வையாளர்போல் வந்து செல்கிறார்.
மும்பையில் ஒரு பெரிய கேங்ஸ் ஸ்டார் சண்டையில் அண்ணன் சசிகுமார் நல்லவரோ நல்லவராக காட்டுகிறார். தனுஷின் அண்ணனாக சசிகுமார் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். பெரிய ஆறுதல் வசனங்கள். அழகான தமிழில் கவிதையும் காவியமுமாக பேசி கிக் ஏற்றுகிறார்கள். தர்புகா சிவா இசை, பாடல்கள் மிகப்பெரிய பலம் . மொத்தத்தில் படம் இளைஞர்களை கவரும் .