V4UMEDIA

Thavam

Review By :- V4uMedia Team

Release Date :- 08/11/2019

Movie Run Time :- 2.34 Hrs

Censor certificate :- U

Production :- Ashif Film International

Director :- Vijay Anand, Suriyan

Music Director :- Srikanth Deva

Cast :- Seeman , Bose Venkat , Santhana Bharathi , , Singampuli , Vasi Asif , Pooja Shree , pandi Lingeswaran , Cool Suresh

தவம் – விமர்சனம்

ஆஸிப் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் வசி ஆஸிப் தயாரிப்பில், ஆர்.விஜயானந்த் – ஏ.ஆர்.சூரியன் இயக்கத்தில் அறிமுக நாயகன் வசி, அறிமுக நாயகி பூஜாஸ்ரீ, சீமான் ஆகியோரது நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘தவம்’ .
 
கதை நாயகி பூஜாஸ்ரீயை பலர் பெண் பார்த்து சென்றாலும், அவர் திருமணத்திற்கு மட்டும் மறுப்பு தெரிவித்து வருகிறார். அதற்கான காரணமாக தனது காதல் கதை பிளாஷ்பேக்கை சொல்ல, கிராமத்து நபரான ஹீரோ வசிக்கும், பூஜாஸ்ரீக்குமான காதலுக்கு வில்லனாக அவர்களது குழந்தைப்பருவ நண்பர் வர, அவர்கள் இணைந்தார்களா இல்லையா, என்பது ஒரு பக்கம் இருக்க, இவர்களின் காதல் கதைக்குள் வரும் பிளாஷ்பேக்கில், விவசாய நிலங்களை அபகரித்து மக்களுக்கு கேடு விளைவிக்கும் கெமிக்கல் தொழிற்சாலை கட்ட நினைக்கும் கூட்டத்திற்கு எதிராக போராடும் சீமானின் கதை வருகிறது. இந்த இரண்டு கதைகளுக்கும் உள்ள தொடர்பும், காதல் ஜோடிகள் சேர்ந்தார்களா, இல்லையா, சீமான் தனது போராட்டத்தில் வெற்றிபெற்றாரா இல்லையா, என்பது தான் படத்தின் மீதிக்கதை.

அறிமுக ஹீரோவான வசி, ஹீரோவுக்கான அனைத்து தகுதிகளையும் கொண்டவராக இருக்கிறார். சண்டைக்காட்சி, நடனக் காட்சி, காதல் காட்சி என அனைத்திலும் தனது முழு திறமையையும் காண்பித்திருப்பவர்.


ஹீரோயின் பூஜாஸ்ரீ வெறுமனே காதலுக்காக மட்டும் பயணிக்காமல் கதையுடனும் பயணித்திருக்கும் நாயகியின் நடிப்பும் சிறப்பு .

சீமான் தான் படத்தின் மிகப்பெரிய பலம். தொய்வு ஏற்படும் திரைக்கதையில் சீமானின் பகுதி நமக்கு உற்சாகம் கொடுப்பதோடு, படத்தை விறுவிறுப்பாக்குகிறது . விவசாயிகளுக்காக மட்டும் இன்றி விவசாயத்தின் பலம் தெரியாமல் இருக்கும் பொதுமக்களுக்காகவும் பேசும் சீமானின் அனைத்து வசனங்களும் கவனிக்க வைக்கிறது.

வேல்முருகனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருக்கிறது.


 காதல் கதையாக இருந்தாலும், சமூக அக்கறையோடு திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர்கள் ஆர்.விஜயானந்த் – ஏ.ஆர்.சூரியன், விவசாயம் குறித்து பேசியிருக்கும் அத்தனையும் எதிர்கால தலைமுறைக்கானதாக இருக்கிறது.

மொத்தத்தில், குறைகளை தவிர்த்துவிட்டு நிறைகளை மட்டுமே பாராட்டக்கூடிய சமூகத்திற்கான ஒரு படமாக இந்த ’தவம்’ உள்ளது.

Previous article
Next article

Most Popular

Recent Comments

Review By :- V4uMedia Team Release Date :- 08/11/2019 Movie Run Time :- 2.34 Hrs Censor certificate :- U Production :- Ashif Film International Director :- Vijay Anand, Suriyan Music Director :- Srikanth Deva Cast :- Seeman , Bose Venkat , Santhana Bharathi ,...Thavam