V4UMEDIA
HomeReviewAction Tamil Movie

Action Tamil Movie

Review By :- V4uMedia Team

Release Date :- 15/11/2019

Movie Run Time :- 2.15 Hrs

Censor certificate :- U/A

Production :- Trident Arts

Director :- Sundar.C

Music Director :- Hiphop Tamizha

Cast :- Vishal, Tamannaah Bhatia, Aishwarya Lekshmi, Yogibabu, Akanksha Puri, Kabir Duhan Singh, Ramki

ஆக்சன் விமர்சனம்:

ஆம்பள படத்தை தொடர்ந்து சுந்தர். சி இயக்கத்தில் விஷால் , தமன்னா நடித்து வெளியாகியுள்ள படம் ‘ஆக்சன்’. மேலும் இந்த படத்தில் அகன்ஷா பூரி, சாயாசிங், ஐஸ்வர்யா லட்சுமி, ராம்கி, கபீர் சிங்,யோகி பாபு, ஷா ரா, ஜார்ஜ் மரியான், ஆனந்தராஜ் உள்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க வெளிநாட்டில் தயாராகியுள்ள படம் ஆகும். இந்த படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர். ரவீந்தரன் தயாரித்து உள்ளார். ஹாலிவுட்டில் உருவாகும் ஆக்சன் பாணியில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் விஷாலும்,தமன்னாவும் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்து உள்ளார்கள். மேலும், ஆக்சன் படத்தின் டைட்டிலுக்கு ஏற்றவாறு இந்த படத்தில் அதிரடி சண்டைக் காட்சிகளும் நிறைந்து இருக்கிறது.



அவன் வந்தா ஆப்ஷன் இல்ல, ஆக்சன் தான்”; “உண்மையை தேடி ஆயிரம் கிலோமீட்டர் வந்தவன். உன்னை தேடி அரை கிலோமீட்டர் வர மாட்டானா” என்ற டயலாக் மூலம் கதை தொடங்குகிறது. இந்த படத்தில் விஷால் அவர்கள் ராணுவ அதிகாரியாக நடித்து இருக்கிறார்.

சுபாஷ் என்ற கதாபாத்திரத்தில் விஷால் நடிக்கிறார். மேலும்,விஷாலின் அப்பா முதலமைச்சர் . உலகில் தீவிரவாத இயக்கங்கள் இஸ்தான்புல், லண்டன், லாகூர் ஆகிய இடங்களில் உருவாகிறது. மேலும்,இந்த தீவிரவாத கும்பலில் இருந்து ஒரு குழு மட்டும் இந்திய நாட்டை தாக்குவதற்கு பல முயற்சிகளை செய்து வருகிறது. பின் விஷாலுக்காக நிச்சயம் செய்வதற்காக வீட்டில் பார்க்கப்படும் பெண் தான் ஐஸ்வர்யா.


இவர் தீவிரவாத கும்பலின் தாக்குதலினால் விஷாலுக்கு நிச்சயம் செய்த பெண் மற்றும் விஷாலின் அண்ணன் இறந்து விடுகிறார்கள். இதனால் அந்த கும்பலை கண்டுபிடித்து பழி வாங்குவதற்காக விஷால் கிளம்புகிறார். அப்ப தான் ஆக்ஷன் தொடங்குகிறது. விஷாலுக்கு உதவி செய்வதற்காக ராணுவ பயிற்சியில் இருந்த தமன்னா வருகிறார். அந்த தீவிரவாத கும்பலை பழி வாங்குவதற்காக “சுபாஷ் மிஷன் ” என்ற அமைப்பை உருவாக்கி இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த தீவிரவாத இயக்கத்தை அழிக்கிறார்களா? இல்லையா? என்பது தான் கதையின் சுவாரசியமே.

படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் நடக்கும் க்ரைம்,திரில்லர் கதையாக அமைந்து உள்ளது. மேலும், ஹாலிவுட் படங்களில் பெண் கதாபாத்திரங்கள் தைரியமாகவும், கிளாமராகவும் இருக்கின்ற மாதிரி ஆக்ஷன் படத்திலும் நடிகை தமன்னா கதாபாத்திரமும் உள்ளது.

இந்த ஆக்ஷன் படம் தேசப்பற்று, குடும்ப சென்டிமென்ட், அதிரடி சண்டை,காமெடி என அனைத்து விஷயங்களையும் கொண்ட கதையாக உள்ளது. உண்மையான ஆக்ஷன்னா விஷாலின் ஆக்ஷன் படம் தான். பெண்களுக்கு வலுவூட்டும் கதாபாத்திரம் கொண்ட கதையாக உள்ளது.

மேலும், படத்தின் எடிட்டிங் சிறப்பு . படத்தின் பாடல்களும் மனதில் பதியும்படி இருக்கின்றது .

Most Popular

Recent Comments

Review By :- V4uMedia Team Release Date :- 15/11/2019 Movie Run Time :- 2.15 Hrs Censor certificate :- U/A Production :- Trident Arts Director :- Sundar.C Music Director :- Hiphop Tamizha Cast :- Vishal, Tamannaah Bhatia, Aishwarya Lekshmi, Yogibabu, Akanksha Puri, Kabir Duhan Singh,...Action Tamil Movie