V4UMEDIA
HomeReviewKaaviyan movie Review

Kaaviyan movie Review

Review By :- V4uMedia Team

Release Date :- 18/10/2019

Movie Run Time :- 1.51 Hrs

Censor certificate :- U

Production :- 2m Cinemas

Director :- Sarathi

Music Director :- Syam Mohan MM

Cast :- Shaam, Sridevi Kumar, Athmiya , Srinath ,Alex , Justin Vikash , Jennifer

காவியன் விமர்சனம்

நடிகர் ஷாம் நடிப்பில் நீண்ட காலம் கழித்து வந்திருக்கும் படம். இதில் ஷாம் காவல்துறை அதிகாரியாக வருகிறார். பயிற்சிக்காக அவர் அமெரிக்கா செல்ல, அங்கே அவர் அமெரிக்க அதிகாரிகளுக்கே பயிற்சி கொடுக்கும் அளவில் பணியாற்றுவதுதான் கதை.

அமெரிக்காவில் ஒரு கில்லர் இளம் பெண்களை அவர்களின் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதித்து அதன் அடிப்படையில் குறிப்பிட்ட பெண்களை மட்டும் கடத்திக் கொல்கிறான்.

அதைத் துப்பறியும் டீமில் ஷாமும் பயிற்சியில் இருக்க, அவர் அதைக் கண்டுபிடித்தது எப்படி என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் சாரதி.

அமெரிக்க காவல்துறையில் அவசர கால அழைப்புகளுக்காக இயங்கும் 911 என்ற பிரிவின் பணி ரசிக்க வைக்கிறது. ஒரு நபர் எதிர்கொள்ளும் எந்த வித பிரச்சினையையும் எதிர்கொண்டு அவர்களுக்கு தைரியமூட்டி அவர்களின் துயரைத் துடைக்கும் அந்தப் பிரிவில் பணிபுரிகிறார் நாயகி ஸ்ரீதேவி குமார்.

தொடர்ச்சியாக கடத்தப்படும் இன்னொரு பெண்ணும் உதவிக்கு அழைக்க, அவளையாவது காப்பாற்ற நினைக்கும் ஸ்ரீதேவியும், ஷாமும் எப்படி ஒத்திசைவாக அணுகி பிரச்சினையைக் கைக்கொள்கிறார்கள் என்பது கிளைமாக்ஸ்.

பிளாஷ்பேக்கில் கலகலப்பாக நாகரிக உடைகளில் வருகிறார் ஸ்ரீதேவி

கடத்தப்படும் பெண்ணாக வரும் ஆத்மியாவின் நடிப்பு நன்றாக இருக்கிறது.

அமெரிக்காவில் படமானதால் காட்சிக்குக் காட்சி பிரமிக்க வைக்கிறது எம்.எஸ்.ராஜேஷ்குமாரின் ஒளிப்பதிவு. அதற்கேற்ற ஷ்யாம் மோகனின் பின்னணி இசையும் படத்தின் தரத்தைக் காப்பாற்றுகிறது.

‘காவியன்’ அமெரிக்கப்படம் பார்க்கும் அனுபவத்தைத் தந்திருப்பதாகச் சொல்லலாம்..!

Previous article
Next article

Most Popular

Recent Comments

Review By :- V4uMedia Team Release Date :- 18/10/2019 Movie Run Time :- 1.51 Hrs Censor certificate :- U Production :- 2m Cinemas Director :- Sarathi Music Director :- Syam Mohan MM Cast :- Shaam, Sridevi Kumar, Athmiya , Srinath ,Alex , Justin Vikash...Kaaviyan movie Review