
Review By :- V4uMedia Team
Release Date :- 04/10/2019
Movie Run Time :- 2.31 Hrs
Censor certificate :- U
Production :- Creative Cinemas , NY NJ Entertainment
Director :- M. M. Chandramouli
Music Director :- G. V. Prakash Kumar
Cast :- G. V. Prakash Kumar, Shalini Pandey, Nassar, Thambi Ramaiah , Thalaivasal Vijay , Rekha, Jayachitra , Shivani
100 காதல் விமர்சனம்
எதிலும் நம்பர் ஒன்னாக இருக்கவேண்டும் என்று நினைக்கிற நாயகன் ஜீ.வி.பிரகாஷ் படிப்பில் எப்போதும் முதல்நிலை மாணவர். அவருடைய அத்தைபெண் ஷாலினி பாண்டே, ஜீ.வி.பிரகாஷ் வீட்டிலேயே தங்கிப் படிக்கிறார். ஜீ.வியிடம் பாடம் கற்று அவரையே மிஞ்சுகிறார். அதனால் அவர்களுக்குள் மோதல்.
அதன்பின் அவர்கள் இருவரையும் தாண்டி அதே கல்லூரியில் படிக்கும் யுவன்மயில்சாமி முதல்நிலை எடுக்கிறார்.முதல்நிலையை மட்டும் ஜீ.வியிடம் இருந்து பறிக்காமல் ஷாலினிபாண்டேவையும் பறிக்கிறார் யுவன்மயில்சாமி.அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது என்பதைச் சொல்கிறது படம்.
ஸ்ட்ரிக்ட் ஆபிசராக ஜி.வி.பிரகாஷ் அறிமுகமாகிறார். அரட்டல் உருட்டல் என்று அதகளம் செய்யும் ஜீ.வி,ஓரிடத்தில் யார்றா ரெண்டாவது? எனத் தெனாவெட்டாகக் கேட்கும்போது நீதான் என்கிற பதிலில் அடைகிற அதிர்ச்சி பக்கென சிரிக்க வைக்கிறது.ஷாலினிபாண்டேயிடம் தன் காதலைப் பற்றி விவரிக்கும் காட்சியில் ஜீ.வியின் நடிப்பில் மெருகேறியிருக்கிறது.
ஷாலினிபாண்டே இடையழகைக் காட்டி ஈர்க்கிறார். வேடத்துக்குப் பொருத்தமாக நடித்தும் இருக்கிறார். மாமா மாமா என்று அவர் ஜீவியை அழைப்பது கொஞ்சுவது போலவே இருக்கிறது. அழகாகப் பேசி, அளவாக நடித்து கவர்கின்றன ஜீ.வி.பிரகாஷ் வீட்டில் இருக்கும் ஆறு குழந்தைகள். அவர்கள் யார்? எதற்காக அங்கே இருக்கிறார்கள்? என்பதைத் தெளிவாகச் சொல்லவில்லை.
நாசர், ஜெயசித்ரா, தலிவாசல் விஜய், ரேகா, ஆர்.வி.உதயகுமார், மனோபாலா, அப்புக்குட்டி என படத்தில் நிறையப்பேர் இருக்கிறார்கள்.
ஆர்.கணேஷ் ஒளிப்பதிவு கதைக்குத் தேவையான அளவு இருக்கிறது. ஜீ.வி.பிரகாஷே இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையில் காட்சிகளின் தன்மையை பார்வையாளர்களுக்குக் கடத்த முயன்றிருக்கிறார்.படத்தொகுப்பாளர் மு.காசிவிஸ்வநாதன் படத்தின் நீளத்தைக் குறைத்திருக்க வேண்டும். இயக்குநர் எம்.எஸ்.சந்திரமெளலி திரைக்கதை விறுவிறுப்பு !
ஜீ.வி.பிரகாஷின் நடிப்பில் முன்னேற்றம், ஷாலினிபாண்டேவின் அன்பு மற்றும் அழகு, இருவரின் காதல் காட்சிகள் ஆகியன படத்துக்குப் பலம்.