Home News Kollywood மா.கா.பா. ஆனந்த் – சிருஷ்டி டாங்கே டூயட்

மா.கா.பா. ஆனந்த் – சிருஷ்டி டாங்கே டூயட்

பர்மா படத்தை தொடர்ந்து ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் சுதர்சன வெம்புட்டி, கே.ஜெயச்சதிரன் ராவுடன் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ நவரச திலகம் “ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் மா.கா.பா.ஆனந்த் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் கருணாகரன், ஜெயபிரகாஷ், இளவரசு, பாவா லட்சுமணன், மீராகிருஷ்ணன்,லஷ்மி, மகாதேவன் ஆகியோர் நடிக்கிறார்கள். வித்தியாசமான வேடம் ஒன்றில், இதற்குத் தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களின் இசையமைப்பாளர் சித்தார்த் விபின் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு    –  ரமேஷா /  இசை    –    சித்தார்த் விபின் /  பாடல்கள்   –   யுகபாரதி மோகன்ராஜ்   /  கலை   –  சீனு /  நடனம்   –  தினேஷ்  /   ஸ்டன்ட்   –  மகேஷ்                            தயாரிப்பு நிர்வாகம்   –   லோகு – சங்கர் /   தயாரிப்பு மேற்பார்வை  –   ஆஸ்கார் நாகராஜ் இணை தயாரிப்பு   –  கே.ஜெயச்சந்திரன் ராவ்                                                                   தயாரிப்பு    –  சுதர்சன வெம்புட்டி.      கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் காம்ரன்.

படம் பற்றி இயக்குனர் காம்ரன் கூறியதாவது…    மூர்த்திக்கு ஒரே ஒரு ஆசை. ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய சாதனை செய்து உலக அளவில் புகழ் பெற வேண்டும் என்பது தான்.

அவனது தாரக மந்திரமாக இருப்பது “ ஒரே டீல் ஓஹோன்னுவாழ்க்கை” இது தான். அரை குறையாகத் தெரிந்த தொழிலை எல்லாம் தெரிந்த மாதிரி காட்டிக்கொண்டு அப்பா பன்னீர் சேர்த்த சொத்து எல்லாவற்றையும் காலி செய்து கொண்டிருக்கும் அதிபுத்திசாலி. இந்த கதாப்பாத்திரத்தில் மா.கா.பா.ஆனந்த் தூள் கிளப்பி இருக்கிறார். உடன் கருணாகரன் கேட்கவா வேண்டும்.   சமீபத்தில் மா.கா.பா.ஆனந்த்  – சிருஷ்டி டாங்கே பங்கேற்ற“ கொள்ள அழகுக்காரி  போறாலே முன்னால  நல்லா இருந்தவன  வழி மாற வெச்சாளே “ என்ற பாடல் காட்சியை தென்காசி, குற்றாலம் போன்ற பகுதிகளில் படமாக்கினோம்.  செம ஜாலியான படமாக “ நவரச திலகம் “  உருவாகி உள்ளது என்றர இயக்குனர் காம்ரன்.