V4UMEDIA
HomeNewsKollywoodமாலை நேரத்து மயக்கம் படத்தின் சிங்கள் பாடல் வெளியீட்டு விழா லயோலா கல்லூரியில் நடைபெற்று

மாலை நேரத்து மயக்கம் படத்தின் சிங்கள் பாடல் வெளியீட்டு விழா லயோலா கல்லூரியில் நடைபெற்று

மாலை நேரத்து மயக்கம் படத்தின் சிங்கள் பாடல் வெளியீட்டு விழா  லயோலா கல்லூரியில் நடைபெற்று வரும்ஓவேஷன்ஸ் எனப்படும் கல்லூரி கலை விழாவில் வைத்து நடைபெற்றது. இவ்விழாவில் மாலை நேரத்து மயக்கம் படத்தின் இயக்குநர் கீதாஞ்சலி செல்வராகவன் , தயாரிப்பாளர் கோலா பாஸ்கர் , இசையமைப்பாளர் அம்ரித், படத்தின் நாயகன் பாலகிருஷ்ண கோலா ஆகியோர் கலந்து கொண்டனர்.படக்குழுவினர் விழா மேடையில் ஏறி இயக்குநர் செல்வ ராகவனை அனைவருக்கும் தெரியுமா ?? என்று கேட்ட அடுத்த நொடி மாணவர்கள் அரங்கம் அதிரும்  வகையில் சப்தம் மற்றும் கரவொலி எழுப்பினர். பின்னர் படத்தின் இசையமைப்பாளர் அம்ரித் மாலை நேரத்து மயக்கம் படத்தில் இடம் பெற்றுள்ள ” சரக்க” என்று தொடங்கும் பாடலை அனைவரையும் கவரும் வண்ணம் பாடினார். பாடலை விழாவில்  இருந்த மாணவர்களும் மாணவிகளும்உற்சாகத்துடன் கைதட்டி ரசித்தனர். பாடல் மாணவர்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. இசையமைப்பாளர் அம்ரித் பாடலை பாடி முடித்ததும் விழா இனிதே நிறைவு பெற்றது. மலை நேரத்து மயக்கம் படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

Most Popular

Recent Comments