V4UMEDIA
HomeNewsKollywoodபேரரசு இயக்கத்தில் பார்த்திபன் நடிக்கும் “ திகார் “ இம்மாத வெளியீடு

பேரரசு இயக்கத்தில் பார்த்திபன் நடிக்கும் “ திகார் “ இம்மாத வெளியீடு

பியானோ பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ரேகா மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் “ திகார் “ மிக பிரமாண்டமான முறையில் தயாராகி உள்ள இந்த படத்தில் பார்த்திபன் தாதாவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார்.

இளம் நாயகனாக உன்னி முகுந்தன் நடிக்கிறார். கதாநாயகியாக அகன்ஷா பூரி நடிக்கிறார்.

மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், தேவன், ரியாஸ்கான், மனோஜ்.கே.ஜெயன், ஆகியோரும் நடிக்கிறார்கள்

ஒளிப்பதிவு     –      சேகர்.வி.ஜோசப்

இசை              –      ஆர்.ஏ. ஷபீர்

எடிட்டிங்        –      வி.ஜெய்சங்கர்

நடனம்          –       தினேஷ்

ஸ்டன்ட்         –       தீப்பொறி நித்யா

எழுதி இயக்கியதுடன் அணைத்து பாடல்களையும் எழுதி இருப்பவர் பேரரசு.

தயாரிப்பு   –  ரேகா

படம் பற்றி இயக்குனர் பேரரசுவிடம் கேட்டோம்…நம்பர் ஒன் தாதாவின் வாழ்கையை இதில் பதிவு செய்து உள்ளோம்.

பார்த்திபன் இந்த படத்தில் படு பயங்கர தாதாவாக நடிக்கிறார். அந்த கதாப்பாத்திரம் வலுவுள்ளதாக இருந்ததால் இப்படிப் பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்தேன் என்று பெருமையாக சொல்லி இருக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, துபாய், போன்ற இடங்களில் அதிக பொருட் செலவில் உருவாக்கியுள்ளோம். இதற்க்கு முன் வெளியான எந்த படத்திலும் இந்தளவு சண்டைக் காட்சிகள் இருந்ததில்லை என்கிற அளவுக்கு ஸ்டன்ட் காட்சிகள் இருக்கும்.

படம் இம்மாதம் 21 ஆம்  தேதி திரைக்கு வருகிறது.

Most Popular

Recent Comments