சென்னை,ஜூலை 24:
இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் “டென் எண்டர்டைன்மெண்ட்” எனும் யூ டியூப் சேனல் ஒன்றை துவங்கி இளம் தலைமுறையினரை ஊக்கபடுத்தும் வகையில் அவர்களது குறும் படங்களை வெளியிட உள்ளார். தென் இந்தியாவில் இத்தகைய முயற்சி இதுவே முதல் முறையாகும்.இந்த சேனல் வழியாக தற்பொழுது தமிழ்,தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னட குறும்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படும்.
இதை பற்றி ஐஸ்வர்யா கூறியதாவது “பல திறமையுள்ளவர்களுக்கு தங்கள் திறமைக்கான சன்மானம் கிடைக்காமல் போகிறது,மேலும் அவர்களது திறமை யாருக்கும் தெரியாமல் போகிறது.டென் என்டேர்டைன்மென்ட் அப்படி பட்ட திறமையானவர்களுக்கான ஒரு மேடையாக இருக்கும்.முதலில் தென் இந்திய மொழிகளின் குறும் படங்களை வெளியிட்டு பின்னர் மற்ற மொழிகளிலும் வெளியிடுவோம்.
மேலும் டென் எண்டர்டைன்மெண்ட், வுண்டர்பார் பிலிம்சின் ஒரு அங்கமாகும் மற்றும் டிவோ – அவர்களது டிஜிட்டல் பங்குதாரர்,சமூக ஊடக தளங்களை கவனித்து கொள்ள பொறுப்பேற்றுள்ளனர்.
குறும் பட இயக்குனர்கள் தங்களது படைப்பினை – submit@tenentertainment.com மின் அஞ்சலுக்கு அனுப்பலாம்