செப்டம்பர் 20 ஆம் தேதி ரசிகர்கள் மற்றும் திரைப்பட பார்வையாளர்களின் அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்திருந்த ‘காப்பான்’ படம் வெளியானது. ‘காப்பான்’ பட இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கினார். இந்தப் படத்தில் சூர்யா சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி) அதிகாரியின் பாத்திரத்தில் நடித்தார். இப்படத்தில் நடிகர் மோகன்லால் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்தார். ஆக்ஷன் த்ரில்லர் படமாக விளங்கும் இப்படத்தில் முன்னணி நடிகர் சூர்யா சில டேர்டெவில் ஸ்டண்ட் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார்.
அன்மையில் கே.வி. ஆனந்த் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், சூர்யா ஒரு நடிகராக எப்படி வளர்ந்திருக்கிறார் என்பதைப் பற்றி இயக்குனர் குறிப்பிட்டுள்ளார். சூர்யாவின் முதல் படமான ‘நேருக்கு நேர்’ படத்திற்கு கே.வ. ஆனந்த் ஒளிப்பிதிவை கையாண்டார். ‘நேருக்கு நேர்’ படத்திற்கு பிறகு சூர்யா திரைதுறையை விட்டு விலகியிருப்பார் என்று தான் உண்மையாக உணர்ந்ததாக இயக்குனர் கே.வி. ஆனந்த் கூறுகிறார். அயன், மாற்றான் போன்ற படங்களில் சூர்யாவுடன் பணியாற்றிய இவர் . சூர்யா தனது கலையில் தேர்ச்சி பெற்றிருந்தார் என்பதை இயக்குனர் நேர்மையாக ஒப்புக்கொள்கிறார்.
சூர்யா, அமீர், பாலா, கௌதம் மேனன் போன்ற இயக்குனர்களுடன் பணிபுரிந்த பிறகு, படங்கள் மற்றும் நடிப்பு குறித்து ஏராளமான அறிவை சேகரித்ததாகவும் இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறினார்.