தளபதி விஜய் அவர்களோட நடிப்புல வெளியாக இருக்குற படம் தன ‘பிகில்’. மிகவும் எதிர்பாக்கப்படும் இந்த படத்தை இயக்குனர் அட்லீ எழுதி இயக்கியுள்ளார். படத்தில் நடிகை நயன்தாரா விஜய் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். படத்தில் நடிகர்கள் யோகி பாபு, கதிர், ஜாக்கி ஷிராஃப், விவேக் மற்றும் பலர் முக்கியமான துணை வேடங்களில் நடிக்கின்றனர்.
ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், ஜி.கே. விஷ்ணு மற்றும் ரூபன் முறையே ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் துறைகளை கையாளுகின்றனர்.
இந்த வரவிருக்கும் படத்தின் பிரமாண்டமான ஆடியோ வெளியீடு செப்டம்பர் 19 அன்று சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் உள்ள லியோ முத்து ஆடிட்டோரியத்தில் நடந்தது. இந்த நிகழ்வு பிரபல சேனலான சன் டிவியில் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளது.
இதற்கிடையில் விஜய் அவர்கள் அண்மையில் வெளியூர் செல்ல விமான நிலையம் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் நடந்து செல்வது போல இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.