விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 3 ரியாலிட்டி ஷோ கிட்டத்தட்ட 90 நாட்கள் நிறைவடைந்துள்ளது. ‘டிக்கெட் டு ஃபினாலே’ பணி காரணமாக கடந்த வாரம், பங்கேற்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பல்வேறு விளையாட்டுகள் கடுமையானவை. மேலும், பணிகள் காரணமாக வீட்டில் பல சண்டைகள் காணப்பட்டன.
இப்போது, வார இறுதி எபிசோடின் முதல் ப்ரோமோவில், கமல்ஹாசன், விளையாட்டு மன மற்றும் உடல் ரீதியான போட்டிகளோடு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது என்றும், மனத்தால் பாதிக்கப்பட்டவருக்கே அதிக வலி என்றும் குறிப்பிடுகிறார்.
இரண்டாவது ப்ரோமோவில், கமல் அவர்கள் கவினிடம், “டாஸ்க்க டாஸ்கா விளையாடுனீங்களா இல்ல அதையும் தாண்டியா?” என கேள்வி எழுப்பினார். லாஸ்லியாவிற்கு அடிபட்டதால் கோபம் வந்தது என கவின் கூற. கமல் தர்ஷனிற்கு அடிபடும் பொது ஏன் அது வரவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.